சீனா 2015 ஆம் ஆண்டு குய்சோ 1 ஏ ராக்கெட்டை மேம்படுத்தி அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ராக்கெட்டை தயாரித்தது. இதற்கு குய்சோ 11 என பெயரிடப்பட்டது. 700 டன் எடையைக் கொண்ட இந்த ராக்கெட் சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்படும் செயற்கைகோளானது புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறத்தும்.
2018 ஆம் ஆண்டே விண்ணில் ஏவ முடிவு
குய்சோ 11 ராக்கெட் 2018 ஆம் ஆண்டே விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதன் ஏவல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த கோளாறுகள் சீரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணில் ஏவப்பட்டது.
சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகம்
இது குறித்து தெரிவித்த சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமாக எக்ஸ்பேஸ், இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் 1 எஸ், ஜூலின் 1 கபன்-02 என்ற இரண்டு செயற்கைகோள்களை இந்த ராக்கெட்டியல் ஏவ முடிவு செய்யப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் வணிக நோக்கத்துக்காக விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
பெய்ஜிங் நேரப்படி 12:17 விண்ணில் ஏவப்பட்டது
குய்சோ 11 ராக்கெட் பெய்ஜிங் நேரப்படி 12:17 விண்ணில் ஏவப்பட்டது. இது விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் வெடித்து சிதறியது.
தொழில்நுட்ப கோளாறு
ராக்கெட்டின் இரண்டாம் மற்றும் 3 ஆம் பகுதிகள் பிரிவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் வெடித்து சிதறியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் இதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக