Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 13 ஜூலை, 2020

கொரோனா தடுப்பூசி: மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு!

ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது...!
ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது...!

COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று ஊடக அறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12, 2020) தெரிவித்துள்ளன.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்று விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம் (Sechenov University) கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிவதில் வெற்றி பெற்று விட்டதாக நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ் கூறுகையில்... "செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டது,'' என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டதாகவும், இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து முதல் குழுவினர் வரும் புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த குழுவினர் வருகின்ற 20 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. எனினும், இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் சரிவர தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!