பெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட டெலிவரி நிறுவனமான டன்சோ பெங்களூரு, டெல்லி, குருகிராம், புனே, சென்னை, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் டெலிவரி வர்த்தகத்தினை செய்து வருகின்றன.
அதோடு பைக் டாக்ஸி சேவையினையினையும் குருகிராமில் செய்து வருகின்றது. இது கடந்த 2017ம் ஆண்டு தான் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
கூகுள் ஆதரவுடைய டெலிவரி சர்வீசஸ் ஸ்டார்டப் நிறுவனமான டன்சோ, சனிக்கிழமையன்று ஒரு பாதுகாப்பு மீறலை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு கூட்டாளருக்கு சொந்தமான ஒரு சேவையகம் சமரசம் செய்யப்பட்டது என்று முகுந்த் ஜா கூறியுள்ளார். பெங்களுரு-வினை தலைமையகமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முகுந்த் ஜா ஒரு வலைப்பதிவு இடுகையில், எங்களது கட்டண தகவல்களில் கிரெடிட் கார்டு எண்கள் உள்ளிட்ட பல தகவல்கள் சமரசம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் பாதுகாப்பினை பூர்த்தி செய்ய நிறுவனம் விரைவான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும், பயனர்களின் பாதுகாப்புகளை உறுதி செய்யவும் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகளைச் சேர்த்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் டன்சோ தனது பயனர்களை பாஸ்வேர்டினை மாற்ற அறிவுறுத்தவில்லை என்று கூறியுள்ளது. ஏனெனில் இந்த செயலி ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் ஓடிபி மூலமே செயல்படுகிறது என்றும் டன்சோ தெரிவித்துள்ளது. நாங்கள் எப்போதும் பாதுகாப்பினை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இது நடந்ததிற்கு வருந்துகிறோம்.
இந்த பாதுகாப்பினை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எங்கள் குழு அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றது. எவ்வாறயினும் டன்சோ வெளிப்படுத்தப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையோ அல்லது மூன்றாம் தரப்பு கூட்டாளர்களின் சேவையகத்தையோ பாதிக்கவில்லை.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பரவியதிலிருந்து தரவு கசிவுகள் மற்றும் மீறல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவினை சேர்ந்த சைபர் இண்டலிஜென்ஸ் நிறுவனமான சைபிள், முன்னதாக இந்தியா புல்ஸ் குழும நிறுவனங்களுக்கு சொந்தமான தரவுகளை, கணக்கு விவரங்கள், பரிவர்த்தனை விவரங்கள், வவுச்சர்கள் வங்கி மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள் போன்றவற்றை ஹேக் செய்து கசியவிடுவதாக ஹேக்கர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக