>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 10 டிசம்பர், 2019

    கடலை கையால் தொட்டான்... கை நனையவில்லை... எப்படி?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
    சுந்தர் : ஏயா.. சுடுகாட்டுக்கு பக்கத்துல வீடு கட்டியிருக்க? பேய் நடமாட்டம் இருக்குமே!!
    வடிவேலு : என் பொண்டாட்டி இருக்கும்போது பேயாவது, பிசாசாவது தைரியமா வருமா?
    சுந்தர் : 😂😂
    ------------------------------------------------------------------------------------------------------------
    கஸ்டமர் : ஏன் அவருக்கு லோன் சேங்க்ஷன் ஆகல?
    பேங்க் மேனேஜர் : மொட்டை மாடியில கிணறு வெட்டப் போறாராம்!
    கஸ்டமர் : 😳😳
    ------------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : என்னங்க போயும் போயும் இந்த டாக்டர் கிட்டயா நான் கண் செக் பண்ணிக்கணும்?
    கணவன் : ஏன்? என்ன ஆச்சு?
    மனைவி : பாருங்க அவருக்கே பார்வை நேரம் ஆறு டூ ஒன்பது-னு, மூணு மணிநேரம்தான் போட்டிருக்கு!?
    கணவன் : 😭😭
    ------------------------------------------------------------------------------------------------------------
    மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!
    மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!
    மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?
    மருமகன் : 😑😑
    ------------------------------------------------------------------------------------------------------------

    இது வேடிக்கைக்காக மட்டுமே !!
    ⭐ வேலை செய்து கொண்டே சாப்பிடக்கூடிய உணவு எது? - பணியாரம்
    ⭐ தினமும் நம்மை சந்திப்பது எது? - சந்திரன்
    ⭐ உயிரில்லாத தலை எது? - தபால் தலை
    ⭐ அவன் கடலை கையால் தொட்டான். கை நனையவில்லை எப்படி? - கடலை (பொட்டுக்கடலை) ஈரமாக இல்லாததால்.

    விடுகதைகள் !!
    1. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான். அவன் யார்? - கத்திரிக்கோல்
    2. ஏற்றி வைத்து அணைத்தால், எரியும் வரை மணக்கும். அது என்ன? - ஊதுபத்தி
    3. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல். அது என்ன? - விக்கல்
    4. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும். அது என்ன? – பஞ்சு
    ------------------------------------------------------------------------------------------------------------
    இது உண்மை அல்லவா?
    வீரம் என்பது
    பயப்படாத மாதிரி நடிக்கிறது..
    புத்திசாலி என்பது
    அடுத்தவனை முட்டாளாக்குவது..

    சந்தோஷம் என்பது
    பணம் இருப்பதாய் காட்டிக் கொள்வது..
    அமைதி என்பது
    அடுத்து என்ன பேசனும்னு தெரியாமலிருப்பது..
    குற்றம் என்பது
    அடுத்தவர் செய்யும்போது தெரிவது..
    பொதுசனம் என்பது
    கூடி நின்று வேடிக்கை பார்ப்பது..
    தானம் என்பது
    வீட்டில் உள்ள பழையதை கொடுப்பது..
    பணிவு என்பது
    மரியாதை இருப்பதுபோல் நடிப்பது..
    நேர்மை என்பது
    நூறை திருப்பிக் கொடுத்து இருநூறாய் கேட்பது..
    நல்லவன் என்பது
    கஷ்டப்பட்டு நடிப்பது..
    எதார்த்தம் என்பது
    நெல்லை விற்றுவிட்டு அரிசி வாங்கிக்கொள்வது..
    சிரிப்பு என்பது
    அடுத்தவன் விழும்போது வருவது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக