டயட் இருப்பவர்களா? நீங்கள் ரசித்து,
ருசித்து சாப்பிட வேண்டுமாவயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள்,
டயட்டில் இருப்பவர்கள் சத்தான சுவையான உணவு செய்தால் மிகவும் விரும்பி
சாப்பிடுவார்கள். இப்போது சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி செய்வது எப்படி? என்று
பார்க்கலாம்.
தேவையானப்
பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
முளை கட்டிய பாசிப்பயிறு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 மூடி
தனியாத்தூள் - 6 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 10
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
:
முதலில் வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப்
பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் முந்திரியை வறுத்து கொள்ளவும். பிறகு
பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு
வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு,
அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு
தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு முளைகட்டிய பாசிப்பயிறு,
தனியாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி
வேக விடவும். 3 விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை தூவி
இறக்கினால், சூப்பரான சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக