Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சிம்ம ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்

 Image result for சிம்ம ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்
துணிவுமிக்க சிம்ம ராசி அன்பர்களே...மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.
 
ராசிநாதனான சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ஆட்சிப்பெற்ற நிலையில் இருப்பதால் மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். செயல்பாடுகளில் தெளிவும், நேர்த்தியும் மேம்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் கடன் வாய்ப்புகள் சாதகமாகும்.

பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் இலாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பெரிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான மாற்றத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும்.
விவசாயிகளுக்கு :

மனை தொடர்பான விவகாரங்களில் சாதகமான சூழல்கள் ஏற்படும். புதிய இயந்திரங்களை வாங்கி விளைச்சல்களை அதிகப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மேம்படுத்துவீர்கள்.
வியாபாரிகளுக்கு :

சம வயதினர்களின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் பலன்கள் கிடைக்கும். நகை தொழில் செய்பவர்களுக்கு அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையும் உண்டாகும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பேச்சுக்களின் மூலம் அனைவரின் மனதையும் கவர்வீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வேலை பற்றிய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மேம்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சுயதொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் அவசரப்படாமல் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :

மூத்த கலைஞர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரங்களும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். மனதில் தேவை இல்லாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
பரிகாரம் :

சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர காரியத்தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!