Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மிதுன ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்

 Image result for மிதுன ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்
புதுமை செய்வதில் விருப்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...!!
மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.
ராசிநாதனான புதன் ஏழாவது வீட்டில் இருக்க சுபச்செயல்கள் தொடர்பான முயற்சிகள் நல்ல பலனை அளிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சகோதர உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்காக எதிர்பார்த்து கொண்டிருந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த புதிய முடிவுகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வது நன்மையளிக்கும்.
மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படவும். ஆடம்பர பொருட்களை வாங்கி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சம வயதினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது தகுந்த ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி தொடர்பான பணிகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது நிதானத்துடன் செயல்படவும். சிறு விஷயங்களையும் பதற்றமின்றி செய்யவும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
 வரப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். மனைகளில் சிறு மாற்றங்களை செய்வதற்கான சூழல்கள் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்து கொண்டிருந்த மின் இணைப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
 வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் அதன் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். தடைபட்டு கொண்டிருந்த தனவரவுகள் கிடைக்கும். பொன் நகைகள் தொடர்பான வியாபாரத்தில் இலாபம் மேம்படும்.
மாணவர்களுக்கு :
 மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிலும் விளையாட்டுத்தனமாக செயல்படுவதை தவிர்க்கவும். தொழில்நுட்பம் தொடர்பான கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு :
உடன் இருப்பவர்களிடம் தனிப்பட்ட கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். பெற்றோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் தெளிவு உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு மேம்படும். உத்தியோகம் செல்பவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
 உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு மற்றும் தடைபட்டு கொண்டிருந்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.
கலைஞர்களுக்கு :
 கலை சார்ந்த சிந்தனையின் மூலம் புதிய பாதையில் பயணிப்பீர்கள். வருமானம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். புதுவிதமான படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
பரிகாரம் :
 சனிக்கிழமைதோறும் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக