>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 10 டிசம்பர், 2019

    இப்படி யோசிக்கலாம்? இப்படித்தான் யோசிக்கக்கூடாது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    சிரிக்கலாம் வாங்க...!!

    ஆசிரியர் : நான் அப்பவே 7 கிலோமீட்டர் நடந்துசென்று படித்து வந்தேன்.
    மாணவன் : அப்படின்னா? அப்பவே உங்களுக்கும், படிப்புக்கும் தூரமா சார்......
    ஆசிரியர் : 😶😶
    --------------------------------------------------------------------------------------------------------
    நீதிபதி : ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்..
    குற்றவாளி : ஒரு பீட்ஸா, இரண்டு தோசை, 3 இட்லி, ஒரு கூல்டிரிங்ஸ்.
    நீதிபதி : ஷட் அப்.
    குற்றவாளி : இல்லை... இல்லை... செவன் அப்.
    நீதிபதி : 😩😩
    --------------------------------------------------------------------------------------------------------
    சேல்ஸ்மேன் : சார்... எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க.
    ராஜு : வேண்டாம்பா... அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும்.
    சேல்ஸ்மேன் : 😳😳
    --------------------------------------------------------------------------------------------------------
    டீச்சர் : முகலாய அரசர்கள் எப்போதிருந்து எப்போது வரை ஆட்சி செய்தார்கள்.
    மணி : முழுசா எனக்கு தெரியாது டீச்சர்.
    டீச்சர் : பரவாயில்லை தெரிஞ்சவரைக்கும் சொல்லு.
    மணி : பேஜ் நம்பர் 7 முதல் 13 வரை.
    டீச்சர் : 😑😑
    --------------------------------------------------------------------------------------------------------
    நோயாளி : கண்டிப்பா தினமும் பச்சை முட்டை சாப்பிடணுமா? என்னால முடியாது டாக்டர்.
    டாக்டர் : ஏன் முடியாது?
    நோயாளி : ஏன்னா... எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
    டாக்டர் : 😠😠
    --------------------------------------------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு?
    👉 எதையும் ஆழமாக நேசிக்காதே...
    துன்பப்படுவாய்.!

    👉 எதையும் ஆழமாக யோசிக்காதே....
    குழம்பி விடுவாய்.!
    👉 எதையும் எங்கும் யாசிக்காதே...
    அவமானப்படுவாய்.!
    --------------------------------------------------------------------------------------------------------
    பென்சில் கற்றுக்கொடுப்பது என்ன?
    பென்சில் கற்றுக்கொடுப்பது
    வாழ்க்கையில் ஒன்றே ஒன்றுதான்...
    கூர்மையாய் இரு...
    இல்லையேல் சீவி விடுவார்கள்...!
    --------------------------------------------------------------------------------------------------------
    இது உண்மையா? இல்லையா?
    எனக்கு தெரியும் என்பதற்கும்,
    எனக்கு மட்டும்தான் தெரியும் என்பதற்கும்
    பல வித்தியாசங்கள் இருக்கின்றன...
    இது பலருக்கு இங்கு புரிவதே இல்லை...
    --------------------------------------------------------------------------------------------------------
    எப்படி யோசிக்கலாம்? யோசிக்கக்கூடாது?
    ⭐ வாழ்க்கையில் ஜெயிக்க
    ஆயிரம்முறை கூட யோசிக்கலாம்...
    ⭐ ஜெயிப்போமா? என்றுதான்
    ஒருமுறை கூட யோசிக்கக்கூடாது.
    --------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.

    பொருள் :

    சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக