>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

    நாலு கால் உண்டு, ஆட்ட வால் இல்லை... அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ---------------------------------------------
    சிரிப்பதற்கான நேரம்...!
    ---------------------------------------------
    ராமு : ஐப்பசியில் எல்லோருக்கும் ஓசியில டிபன் கிடைக்கும்.
    சோமு : எப்படி?
    ராமு : அப்போதான் 'அடை" மழை பெய்யுமே!
    சோமு : 😩😩
    ---------------------------------------------
    மனைவி : என்னங்க... சீக்கிரம் டி.விய ஆஃப் பண்ணுங்க!
    கணவன் : ஏன் பையன் படிக்கிறானா?
    மனைவி : இல்லைங்க... பக்கத்து வீட்டுல ஏதோ சண்டை... ஒன்னுமே கேட்க மாட்டேங்குது...!
    கணவன் : 😟😟
    ---------------------------------------------
    கமல் : அண்ணே... கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னா எவ்வளோ சம்பாதிக்கணும்?...
    விமல் : டேய்.. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்க கல்யாணம் வேற, சந்தோஷம் வேற இரண்டையும் எப்பவும் சேர்த்து பாக்கக்கூடாது.
    கமல் : 😕😕
    ---------------------------------------------

    சீலா : உன்னோட மாமியார் கிணத்துல விழுந்து தவிக்கும்போது நீ ஏன் பக்கத்துல இருந்தும் காப்பாத்துல?...
    மது : டாக்டர்தான் எந்த ஒரு விஷயத்துக்கும் உணர்ச்சிவசப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு...
    சீலா : 😬😬
    ---------------------------------------------
    கணவன் : என்னோட மனைவி வாய கட்டிப்போட ஏதாவது மந்திரம் சொல்லுங்க?...
    சாமியார் : அது தெரியாமதான் நானே சாமியார் ஆகிட்டேன்...
    கணவன் : 😝😝
    ---------------------------------------------
    முத்தான பொன்மொழிகள் !!
    ---------------------------------------------
    ✨ நம்பிக்கை கடவுளையும் அசைக்கும், பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.

    ✨ இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.

    ✨ வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.
    ---------------------------------------------
    விடுகதைகள்...!!
    ---------------------------------------------
    1. ஊர் முழுவதுக்கும் ஒரே விளக்கு, இதற்கு ஒரு நாள் ஓய்வு..

    2. சொம்பு நிறையக் கம்பு. இது என்ன?

    3. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான்... இவன் யார்?

    4. நாலு கால் உண்டு, ஆட்ட வால் இல்லை... அது என்ன?

    விடை:

    1. நிலா
    2. மாதுளம்பழம்
    3. இளநீர், நுங்கு,
    4. நாற்காலி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக