Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

இது கேள்வியே இல்லை... ஆனால் அனைவரும் எதிர்பார்ப்பது பதில்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்கலாம் வாங்க...!!

தினேஷ் : என்னோட காதல் உண்மையானது... கண்டிப்பா ஒரு நாள் என்னை தேடி என் காதலி வருவாள்...
கணேஷ் : எதுக்கு... அவளோட கல்யாண பத்திரிக்கை கொடுக்கவா?
தினேஷ் : 😳😳

பெண் : நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு..
ஆண் : ஐய்யய்யோ! உன் தங்கச்சிக்குமா??
பெண் : 😡😡
---------------------------------------------------------------------------------------------------------
இப்படி இருங்கள்...!!
இன்பம் வந்தால் மகிழ்ச்சியாக இரு...
துன்பம் வந்தால் அனுபவமாக இரு...
சந்தேகம் வந்தால் பொறுமையாக இரு...
பயம் வந்தால் மௌனமாக இரு...
வெற்றி வந்தால் அகந்தை கொள்ளாமல் இரு...
---------------------------------------------------------------------------------------------------------

விடுகதைகள்..!!
👉 அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
👉 அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
👉 சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
👉 பார்க்க அழகு... பாம்புக்கு எதிரி அது என்ன?
👉 பாலிலே புழு நெளியுது. அது என்ன?

விடை :

👉 கோலம்
👉 வெங்காயம்
👉 வாழைப்பழம்
👉 மயில்
👉 பாயாசம்
---------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த டவுட் வந்துருக்கா?
நீருக்கு அடியில் அழ முடியுமா?
மீன்களுக்கு தாகம் எடுக்குமா?
பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?...
பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக்கொள்வதில்லை?...
வட்ட வடிவ பீட்சா ஏன் சதுர பெட்டியில் வருது?

I Love You என்பது கேள்வியே அல்ல... பின் ஏன் அனைவரும் அதற்கு பதிலை எதிர்பார்க்கிறார்கள்?
---------------------------------------------------------------------------------------------------------

கண்டுபிடியுங்கள்..!!
 பிட்டுப்பார்த்தால் புழு பழத்தைப் அத்தனையும் அத்திப்.
 சாக்கு சறுக்கினது நொண்டிக் குதிரைக்குச்.
 நில்லாது நெடுங்காலம் கொடுங்கோல் அரசு.

விடை :

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
 கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக