வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஐபோன் 11 ப்ரோ + சைபர்ட்ரக் = 'சைபர்போன்'! முன்பதிவுக்கு ரெடி ஆனா இதன் விலை அம்மாடியோவ்!


ஐபோன் வாங்க கிட்னியை விற்க வேண்டும்

ப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாடல், யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது. ஆம், கேவியர் டிசைனிங் நிறுவனம் சைபர்டிரக் மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடலை ஒன்றிணைத்து 'சைபர்ஃபோன்' என்ற டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன் வாங்க கிட்னியை விற்க வேண்டும்
ஆப்பிள் ஐபோன் என்றதும் அதன் தரம், வடிவமைப்பு, எளிய பயனர் முறை என்றெல்லாம் நினைவிற்கு வந்தாலும், மிக முக்கியமாக, அதன் பிரீமியம் பிராண்டிற்காக மட்டுமே பெரிதும் விற்பனையாகிறது. ஐபோன் வைத்திருப்பது என்பது தற்பொழுது ஒரு நிலைச் சின்னமாக மாறிவிட்டது, இதற்கான காரணம் அதன் விலை நிர்ணயம் தான். ஐபோன் வாங்க கிட்னியை விற்க வேண்டும் என்ற நகைச்சுவை போல அதிக விலை கொண்டது இந்த ஐபோன்.
களமிறங்கும் சைபர்ஃபோன்
இருப்பினும், ஆப்பிள் ஐபோன்-களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த உணர்வைப் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனமான கேவியர் டிசைனிங் நிறுவனம், ஐபோன் 11 ப்ரோ மாடலை, டெஸ்லா நிறுவனத்தின் சைபர்ட்ரக் போலத் தோற்றமளிக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்துள்ளது. சைபர்ட்ரக் மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடலை இணைத்து 'சைபர்ஃபோன்' என்ற புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
கேவியர் நிறுவனத்தின் புதிய முயற்சி
வடிவமைப்பு நிறுவனங்களில் மிகச் சிறப்பான நிறுவனமாகக் கருதப்படும் கேவியர் நிறுவனம், இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தற்பொழுது இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள சைபர்போன் விற்பனைக்கும் தயாராகிவிட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக வெறும் 99 யூனிட்களை மட்டுமே கேவியர் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று தெளிவாக கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
உள்ளே ஐபோன் வெளிய மிரட்டலான சைபர்போன்
சைபர்ஃபோன் அடிப்படையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெளிப்புற பேக்கேஜிங் கொண்ட ஐபோன் 11 ப்ரோ ஆகும், இதன் வெளிப்புற டிசைனிங் வடிவமைப்பு மட்டும் சைபர்ட்ரக் போல் உருவாக்கப்பட்டுள்ளது. சைபர்ட்ரக் என்பது டெஸ்லாவின் சமீபத்திய மின்சார வாகனமாகும், இது வழக்கமான ட்ரக் லாரிகளை போல் இல்லாமல் ஸ்பேஸ் டிரக் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை அமெரிக்காவில் சுமார் 40,000 டாலர்கள்.
ஆப்பிள் வடிவமைப்பில் புதிய அணுகுமுறை
டெஸ்லாவின் சைபர்ட்ரக் வடிவமைப் பற்றி ஏராளமான மீம்ஸ்கள் வந்தது, இதற்கான காரணம் சைபர்ட்ரக்கின் டிசைனில் கூர்மையான கோணங்கள் மற்றும் நேர் கோடுகள் மட்டுமே இருந்தது, தற்பொழுது கேவியர் டிசைன் செய்துள்ள சைபர்போனிலும் இதே டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான ஐபோன் வடிவமைப்பிற்கு மாறான ஒரு புதிய அணுகுமுறை.
உறுதியான ஷீல்ட்டிங் கவர்
சைபர்ஃபோன், ஐபோன் 11 ப்ரோ மாடலின் மறுவடிவமைப்பாக மட்டுமல்லாமல், இதன் உருவாக்கம் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் அலுமினியம் 7000-சீரிஸ் அலாய் தரத்தைவிட பிரீமியம் தரமாகும். சைபர்போனின் டிஸ்பிளே கவசம் கூட டைட்டானியத்தால் செய்யப்பட்டு, போல்டபில் கவருடன் வருகிறது. இந்த ஷீல்ட்டிங் கவர், காட்சி டிஸ்பிளே உடைவதிலிருந்து பாதுகாக்கிறது.
சைபர்போனின் அம்மாடியோவ் விலை என்ன தெரியுமா?
சைபர்ஃபோன் இப்போது முன்பதிவிற்குத் தயாராகிவிட்டது, கேவியரின் இந்த புதிய சைபர்ஃபோன் 15,860 டாலர்கள் என்ற விலையில் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.11.3 லட்சமாகும். ஆனால், சைபர்போன் வரையறுக்கப்பட்ட யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், சைபர்போன் வேண்டும் என்பவர்கள் வேகமாக கேவியர் வலைத்தளத்திற்குச் சென்று முன்பதிவு செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்