>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 27 ஏப்ரல், 2020

    டங்க் ஸ்லிப் ஆகுதா? முடிஞ்சா இத சொல்லுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    ஆசிரியர் : வகுப்பு நடந்து கொண்டு இருக்கும்போது நடுவுல எழுந்து போனன்ணு சொன்னாங்க...!
    மாணவன் : பொய் சார். அவங்க சொல்றத நம்பாதீங்க...
    ஆசிரியர் : எதை நம்பக்கூடாது?
    மாணவன் : நிச்சயமா நான் நடுவுல எழுந்து போகல, பின்னால இருந்துதான் எழுந்து போனேன்!
    ஆசிரியர் : 😡😡
    ---------------------------------------------------------------------
    ஆசிரியர் : நீ தலைகீழா நின்னா உன் தலை எங்க இருக்கும்?
    மாணவன் : அது எப்பவும் போல கழுத்துக்கு மேலதான் இருக்கும் சார்.
    ஆசிரியர் : 😩😩
    ---------------------------------------------------------------------
    கமலா : ஒரே ஒரு காய்க்கு மட்டும் மோதிரம் மாட்டிவிடலாம். அது என்ன காய்?...
    மாலா : ம்ம்ம்.. தெரியலையே...
    கமலா : வெண்டைக்காய்... ஏன்னா அது லேடீஸ் ஃபிங்கராச்சே..
    மாலா : 😝😝
    ---------------------------------------------------------------------
    ஆசிரியர் : சிவா... ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
    சிவா : அதான் சார் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னு கேட்டேனா?
    ஆசிரியர் : 😠😠
    ---------------------------------------------------------------------
    தொழில் மரியாதையும்... சுய மரியாதையும்..!

    செருப்பு கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார். கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.

    இது செருப்பு வாங்க வந்த கஸ்டமருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார் கஸ்டமர். ஆனாலும், பணியாளர் விடவில்லை.

    பணியாளர் தொடர்ந்து அவருக்கு உதவினார். கஸ்டமர் பெருந்தன்மையாக சொன்னார் 'ஐயா! நானும் மனிதன், நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது"

    பணியாளர் சிரித்தபடி சொன்னார்.

    'இந்த கடைக்கு வெளியே போய்விட்டால், நீங்கள் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன்". அது என்னுடைய சுய மரியாதை!

    கடைக்குள் நீங்கள் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். இது என்னுடைய தொழில் மரியாதை என்றார்.
    ---------------------------------------------------------------------
    டங்க் சிலிப் ஆகுதா..?

    மாமியின் வழ கொழ பேச்சைக் கேட்டு தட புடலாய் செலவு செய்து வழக்கத்துக்கு மாறான பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை வழுவியும் வேண்டாமே.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக