சிரிக்கலாம் வாங்க...!!
அருண் : சார்... என் மனைவியை ரெண்டு நாளா காணோம்.
போலீஸ் : ரெண்டு நாளா என்னய்யா பண்ணுன?
அருண் : எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்துக்கிட்டிருந்தேன் சார்.
போலீஸ் : 😁😁
---------------------------------------------------------------------
குணா : அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத்தான் எதிர்பார்ப்பாரு...
குமார் : ஏன்...?
குணா : அவருதான் கைரேகை ஜோசியம் பாக்குறவராச்சே... அதான்...
குமார் : 😬😬
---------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான். அவன் யார்?
2. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
3. வினா இல்லாத ஒரு விடை. அது என்ன விடை?
4. உரசினால் உயிரை மாய்த்துக் கொள்ளும். அது என்ன?
விடைகள் :
1. இளநீர்
2. எறும்பு
3. பணிவிடை
4. தீக்குச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக