>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 27 ஏப்ரல், 2020

    தன்னம்பிக்கை தரும் நொண்டி விளையாட்டு..!!

    ⚡ நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளில் நம் உடலுக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது நொண்டி விளையாட்டு. இது பாண்டி விளையாட்டு என்றும் அழைக்கப்படும். ஆனால் தற்போது நொண்டி விளையாட்டு என்றால், அப்படி என்ன? என்று கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.

    ⚡ நம் முன்னோர்கள் விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி வந்தனர். ஆனால், காலப்போக்கில் அவைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. அவற்றை அனைத்தும் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் முயற்சியில் இப்போது நாம் உள்ளோம்.

    ⚡ அவற்றில் இன்று நாம் நொண்டி விளையாட்டு எவ்வாறு விளையாடுவது? அவற்றின் பயன்கள் என்ன? என்பதை பற்றி முழுமையாக காண்போம்.

    விளையாடும் முறை :

    👉 நொண்டி விளையாட்டு இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். இதற்கு எந்தவொரு வரைமுறையும் கிடையாது.

    👉 முதலில் வட்டம் ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்திற்குள் விளையாட்டில் உள்ள அனைவரும் இருக்க வேண்டும்.

    👉 பின்னர் அதில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நொண்டி அடிக்க செய்ய வேண்டும்.

    👉 நொண்டி அடித்து செல்பவர் ஒருவரை தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் இரு கால்களையும் ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்துவிடலாம்.

    👉 அனைவரையும் ஆட்டமிழக்க செய்யும் வரை இந்த ஆட்டம் தொடரும், பின் மற்றொருவரை தேர்வு செய்து இதேபோன்றே தொடர்ச்சியாக விளையாடலாம்.

    விதிமுறை :

    ✅ நொண்டி விளையாட்டில் உள்ளவர்கள் அதற்காக போடப்பட்டிருக்கும் வட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை அவர் வட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால், அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்.

    ✅ நொண்டி அடித்து செல்பவரின் கால் வலித்தால் வட்டத்திற்கு இடையில் சிறிய வட்டம் போடப்பட்டிருக்கும் அதில் கால்களை வைத்து நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்ற பகுதியில் கால்களை ஊன்றக்கூடாது.

    ✅ அந்த வட்டத்தின் மற்ற பகுதிகளில் இரு கால்களையும் நொண்டி அடித்து செல்பவர் ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்துவிடலாம்.

    பயன்கள் :

    ✏ நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது.

    ✏ கால்களுக்கு இடையே இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும், இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலை தருவதோடு, தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்கிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக