>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 8 செப்டம்பர், 2020

    வாழ்க்கையின் ரகசியங்கள்... அடடே... இது நல்லாருக்கே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    கலக்கலான காமெடிகள்...!!
    -------------------------------------
    வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
    ராமு : வரணும்-னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சு...
    வித்வான் : 😏😏
    -------------------------------------
    அருண் : ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்யுறாரு?
    திலீபன் : எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...
    அருண் : 😂😂
    -------------------------------------
    ராஜா : பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னாரு-ன்னு சொன்னியே... யாருக்கு என்னாச்சு?
    பாண்டி : டாக்டருக்குத்தான், இன்னைக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட கிடைக்கலையாம்...
    ராஜா : 😬😬
    -------------------------------------
    அட அப்படியா?
    -------------------------------------
    நீ இழந்ததை நினைத்து வருந்தினால்,
    இருப்பதையும் இழந்து விடுவாய்...

    நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால்
    இழந்ததையும் அடைந்து விடுவாய்...
    படித்ததில் பிடித்தது...!!
    வாழ்க்கையின் ரகசியங்கள் இரண்டே இரண்டுதான்...

    தோல்வி அடைந்தால் அது உனக்கு பிரியமானது போல் காட்டிக்கொள்...
    வெற்றி அடைந்தால் அது உனக்கு மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்...

    வெற்றி இரண்டு மடங்கு நம்பிக்கை கொடுக்கும்...
    தோல்வி இரண்டு மடங்கு அனுபவத்தை கொடுக்கும்...
    -------------------------------------
    அடடே... இது நல்லாருக்கே...!!
    -------------------------------------
    தோல்வி என்பது பெருங்காயம் போல...
    தனியாக சாப்பிட்டால் கசக்கும்...
    வெற்றி என்னும் சாம்பாரில் கரைத்து விட்டால் மணக்கும்...

    குக்கரைப்போல இருங்கள்...
    பிரஷர் அதிகமாகும்போது
    விசில் அடித்து கொண்டாடுங்கள்...

    லட்சியமும், முட்டையும் ஒன்று...
    தவறவிட்டால் உடைந்துவிடும்...

    சோம்பேறித்தனம் என்பது மிளகாய் காம்பு போல...
    கிள்ளி எறிந்துவிட வேண்டும்...
    -------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -------------------------------------
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

    விளக்கம் :

    அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக