Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

தெரிந்த உண்மை.. தெரியாத உண்மை.. தெரிந்து கொள்ள முடியாத உண்மை.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு !!!

கவின் : சோம்பேறித்தனத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுடா!...
சுரேஷ் : ஒரு பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு வாடா.... முடிஞ்சா சொல்றேன்!...
கவின் : 😉😉
-----------------------------------------------------------------------
மருமகன் : உங்க பொண்ணு கிளி மாதிரி-ன்னு சொல்லி கட்டி வெச்சீங்க... இப்போ அருவாள எடுத்து வெட்ட வரா.
மாமனார் : இது 'வெட்டுக்கிளி" மாப்ள அப்படிதான் இருக்கும்...
மருமகன் : 😠😠
-----------------------------------------------------------------------
மனைவி : ஏங்க... சாதாரணமா பேசும்போது முத்தே... மணியேன்னு கொஞ்சறீங்க... குடிச்சா மட்டும் பேயே... பிசாசேன்னு திட்டுறீங்க?
கணவன் : என்னடி பண்றது? போதை ஏறிட்டா எனக்கு பொய்யே வரமாட்டிங்குது...
மனைவி : 😖😖
-----------------------------------------------------------------------
உண்மையின் வகைகள் !!

மாணவர்களே! நீங்களெல்லாம் உண்மை ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. உண்மையில் மூன்று வகை உண்டு என்றார் ஆசிரியர். மாணவர்கள் திகைத்து நின்றார்கள்.

தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, தெரிந்து கொள்ள முடியாத உண்மை.

முதலில் தெரிந்த உண்மை. ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பேனா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே இது தெரிந்த உண்மை.

இரண்டாவது தெரியாத உண்மை, அண்டார்டிகா பிரதேசம். இங்கு எப்போதும் பனி மூடியே இருக்குமாம். இதை நாம் பார்த்திருக்கிறோமா? இல்லை. ஆனால் அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மை. எனவே இது தெரியாத உண்மை.

மூன்றாவது தெரிந்து கொள்ள முடியாத உண்மை, பிரசவவலி என்கிறார்கள். ஆண்களாகிய நம்மால் அந்தவலி எப்படியிருக்கும் என்று உணரமுடியாது. ஆனால் வலி உண்மைதான். இதுதான் தெரிந்து கொள்ள முடியாத உண்மை.
-----------------------------------------------------------------------
விடுகதைகள்...!

✴ மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்... அது என்ன?

✴ முன்னும், பின்னும் போவான்... ஒற்றைக்காலிலே நிற்பான்... அவன் யார்?

✴ என்னைத் தெரியாதபோது தெரிந்து கொள்ள ஆவல் வரும்... தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ள ஆசை வரும்... நான் யார்?

✴ உடம்பில்லா ஒருவன், பத்துக்கும் மேல் சட்டை அணிந்திருப்பான்... அவன் யார்?

விடைகள் :

✔ மழை நீர்.

✔ கதவு.

✔ ரகசியம்.

✔ வெங்காயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக