வெள்ளி, 29 மே, 2020

4-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஜோதிட சாஸ்திரப்படி, சில துன்பங்களை தரக்கூடிய கிரகங்களை குருபகவானின் பார்வை பட்டால், அவரின் துன்பங்கள் விலகி நன்மைகள் பெருகி, நற்பலன்கள் அதிகரிக்கும்.

ஜனன காலத்தில் ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிக சிந்தனை, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், ஆன்மிக குருக்களின் சந்திப்பு, தெய்வ பக்தி, நல்ல புத்தி, சமூகத்தில் நன்மதிப்பு என அனைத்தும் கிடைக்கும்.

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் நட்பு உண்டாகும். மஞ்சள் நிற ஆடை அணிவதில் விருப்பம் ஏற்படும்.

லக்னத்திற்கு 4-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.

4-ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

👉 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

👉 நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

👉 சுக வாழ்வு உண்டாகும்.

👉 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.

👉 தாயின் மீது அதிக அன்பு உடையவர்கள்.

👉 உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.

👉 ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்களை கொண்டவர்கள்.

👉 வாசனை திரவியங்களை பயன்படுத்தக்கூடியவர்கள்.

👉 ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உடையவர்கள்.

👉 வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

👉 மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

👉 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்