Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

வாழ்க்கையை... வேஸ்ட் பண்ணாம டேஸ்ட் பண்ணுங்க...😜 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!

மனைவி : ஒன்னுக்கும் உதவாத பொருளை அடுத்தவன் தலையில கட்டுறதுல எங்கப்பா கில்லாடி தெரியுமா?
கணவன் : நான் இத, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்...
மனைவி : 😡😡
--------------------------------------------------------------------
பாபு : சூடா என்ன இருக்கு?
சர்வர் : எல்லாமே சூடா இருக்கு...
பாபு : சரி... கொஞ்சம் தேங்காய் சட்னி கொடு...
சர்வர் : 😳😳
--------------------------------------------------------------------
ராஜா : இது ரொம்ப திமிர் பிடிச்ச குடும்பமா இருக்கும் போலிருக்கே...
முரளி : எப்படி சொல்றீங்க?
ராஜா : பொண்ணுக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டா சமைக்க வைக்க தெரியும்னு சொல்றாங்க...
முரளி : 😂😂
--------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.

விளக்கம் :

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
--------------------------------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?

உன் வாழ்க்கை உன் கையில்-னு சொன்னா
பெரிய தத்துவம்னு சொல்றாங்க...
என் வாழ்க்கை என் கையில்-னு சொன்னா
திமிரு புடிச்சவன்னு சொல்றாங்க...
இப்போ என்னதான் சொல்றது?.🤔🤔
--------------------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...!!

பொண்டாட்டி டிவி சீரியல் பாக்கும்போது... ரொம்ப பசிக்குது... சாப்பாடு போடுன்னு சொன்னேன்...
உடனே அவளும் வெறும் தட்ட எடுத்துட்டு வந்து வெச்சா... 5 நிமிஷம் ஆச்சு... 10 நிமிஷம் ஆச்சு...
திடீர்னு காலி தட்ட பாத்துட்டு கேட்டா பாருங்க ஒரு கேள்வி...
சாப்பிட்ட காலி தட்ட எடுத்துட்டு போய் கழுவ போடாம என்ன பண்றீங்கன்னு... அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்...😣😣
--------------------------------------------------------------------
வாழ்க்கை...

⭐ வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி...
⭐ டேஸ்ட் பண்ணினாலும் கரையும்...
⭐ டேஸ்ட் பண்ணலனாலும் கரையும்...
⭐ அதனால வேஸ்ட் பண்ணாம
⭐ டேஸ்ட் பண்றது நல்லது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக