வியாழன், 26 மார்ச், 2020

எது வசதியான வாழ்க்கை தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!

ராமு : டே... நாளைக்கு நான் சினிமாவுக்கு போறேன் வரியாடா?...
சோமு : முடிஞ்ச வரேன்டா...
ராமு : முடிஞ்ச பிறகு ஏன்டா வர? படம் ஆரம்பிக்கும்போதே வரக்கூடாதா?
சோமு : 😆😆
---------------------------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
படிப்பு அறிவை தரும்...

அறிவு பணத்தை தரும்...

பணம் திமிரை தரும்...

திமிரு ஆணவத்தை தரும்...

ஆணவம் அழிவை தரும்...

அதனால்,

படிப்பை எதிர்ப்போம்... ரெஸ்ட் எடுப்போம்...!😎
---------------------------------------------------------------------
வாழைப்பழம்....!!
சார்... உங்க கம்பெனி பேரு என்ன?

'வாழைப்பழம் தம்பி"...

என்ன சார் வாழைப்பழம்-ன்னு பேரு வெச்சுருக்கீங்க?

வெளிநாட்டுக்காரன் ஆப்பிள்-ன்னு வெச்சிருக்கான்...

அதை மட்டும் ஒத்துக்கிட்டீங்க... நாங்க நம்ம நாட்டு பேரு வெச்சா உங்களுக்கு சிரிப்பு வருதோ?😜😜
---------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!

💑 கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனாங்க...

நீதிபதி : உங்களுக்கு 3 குழந்தைகள் 👶 இருக்காங்க... எப்படி பிரிச்சுக்குவீங்க?

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா ஆலோசனை செஞ்சாங்க...

கடைசியில் கணவன் சொன்னான் சரி சார், அடுத்த வருடம் நாங்க இன்னொரு குழந்தையோட வரோம்.

நில்லுங்க... இன்னும் ஜோக் முடியல.... 9 மாசம் கழிச்சு...

அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது...😱😹😹
---------------------------------------------------------------------
திரும்ப பெற முடியாதவை...!!

உடலைவிட்ட உயிர்...

பேசிவிட்ட வார்த்தை...

கடந்துவிட்ட நாட்கள்...

இழந்துவிட்ட இளமை...

கொடுத்துவிட்ட வாக்கு...

---------------------------------------------------------------------
நம்மை அறியாமல்...!!

எது வசதியான வாழ்க்கை?...
ஆடி கார்ல போறது வசதியான வாழ்க்கை அல்ல...
ஆஸ்பத்திரிக்கு போகாம வாழ்வதே வசதியான வாழ்க்கை...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்