>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 25 மார்ச், 2020

    'கடவுளின் செயல்' கடனை செலுத்த முடியாது.. வங்கிகளுக்கு வந்த 'புதிய' பிரச்சனை..!


    இந்திய வங்கிகள் ஏற்கனவே வராக் கடன், திவாலாகும் நிறுவனங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தலைவிரித்தாடும் இந்தச் சூழ்நிலையில் வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப்போகிறது என்பது தான் சவாலான விஷயம். 

    ரியல் எஸ்டேட், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் வர்த்தகம் மிகவும் குறைவாக உள்ளது. அது கடவுளின் செயல் என்பதால் கடனுக்கான தவணையைச் செலுத்தக் கூடுதல் அவகாசமும், பழைய கடனை மறுசீரமைப்பு செய்யவும் வங்கிகளுக்குத் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. 

    கடவுளின் செயல் 

    பொதுவாக வங்கிகளில் Act of God என்ற சொல் உள்ளது. அதாவது மனித சக்தியால் தடுக்க முடியாத சம்பவம் குறிப்பாக இயற்கை பேரிடர், நோய் தொற்று, போர் போன்றவற்றின் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கையை வங்கிகள் எடுக்க உரிமை உண்டு. இதைத் தான் Act of God என்று வங்கி துறையில் குறிப்பிடப்படுகிறது. 

    கோரிக்கை

    ரியல் எஸ்டேட், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் துறை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் Act of God பிரிவில் தங்களது கடனின் தவணைகளைச் செலுத்த அவகாசமும், பழைய கடன் மற்றும் புதிய கடனில் மறுசீரமைப்பு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலனவே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் மதிப்புடையவை என் வங்கி தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    ரிசர்வ் வங்கி தற்போது Act of God பிரிவிலான கோரிக்கைகள் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குக் குவியும் நிலையில் வங்கி தரப்பு இதற்கான அனுமதியை ரிசர்வ வங்கியிடம் கேட்டுள்ளது. 

    கூடிய விரைவில் ரிசர்வ் வங்கி கடனை எப்படிக் கையாளுவது என்பதற்கான வழிமுறையைச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வங்கிகள் தரப்பில் மறுசீரமைப்பிற்கான துவக்கப்பணிகள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

    முக்கியத் துறை 

    டூரிசம், ஹோட்டல், உணவகம் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் சுமார் 45,394 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. ஆனால் இத்துறை வர்த்தகம் 2021ஆம் நிதியாண்டில் 15 முதல் 20 சதவீதம் வரையில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விமானச் சேவை துறை

    ரிசர்வ் வங்கி தகவல்கள் படி விமானச் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்திய வங்கிகள் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளது. ஆனால் விமான நிறுவனங்களின் வருவாய் 44 சதவீதம் குறைந்துள்ளது. இத்துறை வர்த்தகம் கடந்த ஆண்டை விடவும் 2021ஆம் நிதியாண்டில் 3 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக