Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்புமிக்க கருவி எது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------
தீபா : தலையில பேன் தொல்லை தாங்க முடியலை.
டாக்டர் : இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க.
தீபா : பேன் எப்ப தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது?...
டாக்டர் : 😏😏
-----------------------------------------------
கணவன் : ஆமா.. நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னைக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தியா?
மனைவி : ஆமாங்க.. பாயாசம் வெச்சேங்க.. ஏன்?...
கணவன் : தெருமுனையில செத்துக் கிடக்குது...
மனைவி : 😳😳
-----------------------------------------------
பொன்மொழிகள்...!!
-----------------------------------------------
⭐ ஆக்கப்பூர்வமான சிந்தனை தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்புமிக்க கருவியாகும்.

⭐ இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது? என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள்? என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

⭐ ஒரு நொடியையும் வீணாக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்.
-----------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-----------------------------------------------
ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு உடம்பு சரியில்லைன்னு அவரை டாக்டரிடம் அழைத்து சென்றார்...

கணவரை பரிசோதித்து பார்த்த டாக்டர் அந்த பெண்ணிடம் சில அறிவுரைகளை கூறினார். அதாவது, டெய்லி-யும் காலையில மறக்காம சாப்பிட வையுங்க...

அவரை எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வெச்சுக்கோங்க...

அவருக்கு பிடித்ததை, சுவையாக சமைச்சு கொடுங்க...

உங்க பிரச்சனையை அவருக்கிட்ட கொட்டி அவரையும் டென்ஷன் பண்ணாதீங்க...

எப்பவுமே டிவி பாக்காதீங்க, அப்புறம் பேஸ்புக், வாட்ஸ் அப் யூஸ் பண்ணாதீங்க...

நகை நட்டுன்னு கேட்டு நச்சரிக்காதீங்க... அவரை ஃப்ரீயா இருக்க விடுங்க... இதே மாதிரி ஒரு வருஷம் இருந்தா போதும். உங்க கணவர் சரியாகிடுவாரு. கவலையே படாதீங்க... என்றார் டாக்டர்...

பின்னர் இருவரும், வீட்டிற்கு நடந்து வரும்போது கணவன் மனைவியிடம் டாக்டர் என்ன சொன்னாரு? என்று கேட்டார். அதுவா... நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டாரு என்று கூறினார் மனைவி.😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக