Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

நரபலி சாமியார்

பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்கு வந்தனர். அப்போது அந்த ஊர் மக்கள் மிகவும் பயந்து இருந்தார்கள். அந்த ஊரில் நரபலி சாமியார் நாகப்பா இருப்பதால் மக்கள் பயந்தனர்.
மட்டி குருவிடம் குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே அது ஏன் என்று கேட்டான். அதற்க்கு பரமார்த்தர் நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது என்று கூறினார். குருவிடம் உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று முட்டாள் சொன்னான்.
குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக யோசனை செய்தார்கள் முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும் என்று மூடன் குருவிடம் கூறினான். அதற்கு பரமார்த்த்ர் அது நம்மால் முடியாது அதற்கு நிறைய பணம் செலவாகும். வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்.
நரபலி என்றதும் சீடர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். சீடர்களிடம் நரபலி கொடுத்தால் தான் நல்லது நடக்கும் என்று முடிவாக சொல்லி சென்றார் பரமார்த்தர். அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது என்று கேட்டான் மண்டு. யாரோ ஒருவரை நரபலி கொடுத்தால் மாட்டிக்கொள்வோம் அதனால் சீடர்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும் என்றார் பரமார்த்தர்.
ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார் என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். ஐயையோ நான் மாட்டேன் என்று மூடனும் அழுதான். குருவே! நாங்கள் பலியாக மாட்டோம் என்பதால் மற்ற சீடர்களும் பயந்து ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம் வேறு ஒரு வழி இருக்கிறது என்று சொல்லி தூங்கி விட்டார் பரமார்த்தர்.
மறுநாள், சீடர்கள் அனைவரும் எங்கள் குரு நரபலி கொடுக்கப்போகிறார் என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி தெரிந்தது பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையோடு பிடித்து வாருங்கள் என்று கூறினார். நரபலி இடுவதற்காகக் நாளும் நெருங்கின பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள்
ஊரில் உள்ள காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். ஏ காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம் நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் ஷதடால்| என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆனதும், அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்து நின்ற அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள்.
சீடர்களே சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள் என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். ஓம் ரீம் பத்ரகாளி இந்தா நரபலி என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர்.
பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று அனைவரும் பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது.அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார் என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா ஏன் எங்களைக் கைது செய்தாய் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றார் பரமார்த்தர்.
அதற்கு மன்னன,; நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம் என்றார். நாங்கள் மனிதர்களையா பலி கொடுத்தோம் கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம் என்றார் பரமார்த்தர். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி என் நாட்டுக் கொடியில் பல்லி சின்னம் உள்ளது அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன்.
அடடா நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டுவந்து விட்டு விட்டதே என்று புலம்பி கொண்டு குருவும் சீடர்களும் சிறைக்கு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக