சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : மாப்ள... நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்க நிக்கிறா டா...!!
தீபக் : கார் ஓட்டி பாறேன் மச்சி...
பாபு : 😂😂
------------------------------------------------------------------------------------------------
அட அப்படியா?
தவறை போல் ஒரு ஆசான் நமக்கு இல்லை...
பிறப்பை போல் ஒரு வரம் நமக்கு இல்லை...
இறப்பை போல் ஒரு நிம்மதி நமக்கு இல்லை...!
------------------------------------------------------------------------------------------------
கணவர்களே... இது உங்களுக்காக மட்டும்...!!
நேரம் போகவில்லை என்றால் உங்க மனைவியிடம்
'உங்க ஊரெல்லாம் ஒரு ஊரான்னு" மட்டும் கேளுங்க...
அன்றைய பொழுது இனிதாய் போகும்...
ஒரே ஊராக இருந்தால் 'உன் குடும்பம் இருக்கேன்னு" மட்டும் ஆரம்பிங்க...
வேறு எதுவும் சொல்ல வேண்டாம்...
அன்றைய பொழுது உங்களுக்கு இடிமழை, அடியுடன் சேர்ந்து போனால்
நாங்கள் பொறுப்பல்ல...!!
------------------------------------------------------------------------------------------------
இது சரியா?
அடுத்தவன் மாதிரி வாழ ஆசைப்படாதே...
ஏன்னா?... அவனே அடுத்தவன் மாதிரிதான் வாழ ஆசைபடுறான்...
------------------------------------------------------------------------------------------------
யாருக்கு எது அடையாளம்?
விலங்குகள் சென்ற இடமெல்லாம்...
காலடி தடங்களே அடையாளம்...🐾🐾
மனிதர்கள் சென்ற இடமெல்லாம்
குப்பைகளே அடையாளம்...😔😔
------------------------------------------------------------------------------------------------
செல்போன்...!!
செல்போன் வந்த புதிதில் அதிகமாக
செல்போன் உபயோகிப்பவர்களை
வேலையுள்ளவர்களாகவும்,
தற்பொழுது அதிகமாக
செல்போன் உபயோகிப்பவர்களை
வேலையில்லாதவர்களாகவும் யூகிக்க வைக்கிறது...!!
ஒரு டவுட்... முடிஞ்சா கிளியர் பண்ணுங்க...!!
கோவில்ல செருப்பு தொலைஞ்சா நல்லதுன்னு சொல்றாங்க...
தொலைச்சவனுக்கு நல்லதா? இல்ல
எடுத்தவனுக்கு நல்லாதா?-ன்னு சொல்ல மறந்துட்டாங்க...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக