விஜய், ஹரிதா என்றால் தமிழகத்தில் உள்ள
இளைஞர்களுக்கு தெரியாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும்
யூடியூபில் பிரபலம் என்பதும் அவர்களுடைய ஒவ்வொரு மீம்ஸ் வீடியோக்களும்
லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பதும் அந்த சேனல் தற்போது முன்னணி
சேனல்கள் ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த
நிலையில் எருமசாணி விஜய் கடந்த சில மாதங்களாக ஒரு சில திரைப்படங்களில் காமெடி
படத்திலும் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர்
அடுத்த கட்டமாக இயக்குனராக மாறியுள்ளார். எருமசாணி விஜய் இயக்க உள்ள முதல்
படத்தில் பிரபல நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்க உள்ளார்
கல்லூரி
மாணவர் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதும் இந்த கதையை கேட்ட அருள்நிதி உடனடியாக
கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்பை தொடங்க அனுமதி கொடுத்துள்ளார் என்றும்
கூறப்படுகிறது
இந்த
படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில்
நடிக்கும் நாயகி உள்பட நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த
அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை
முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக