கடந்த வாரம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஆண்டு திட்டத்தின் செல்லுபடியை 336 நாட்களாகக் குறைத்தது. அதாவது பழைய ரூ.2020 திட்டத்தை நீக்கி விட்டு, அடக்கு பதிலாக புதிய ரூ.2,121 எனும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது.
முதலில் ரூ.2121 வழியாக, இப்போது ரூ.1,299 மூலம்!
அதன் செல்லுபடி தான் 336 நாட்கள் ஆகும், இருப்பினும் அது 12 மாத செல்லுபடியாகும் ஒரு திட்டமாக விற்பனை செய்யப்படுகிறது, ஏனெனில் சமீப காலமாக இந்திய டெலிகாம் ஆபரேட்டர்கள் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ஒரு மாதம் வேலிடிட்டியை 28 நாட்கள் என்று நிர்ணயம் செய்துள்ளனர். இதுஒருபக்கம் இருக்க, ஜியோ அதன் வருடாந்திர (ரூ.2,121) திட்டத்தின் செல்லுபடியை குறைத்த கையோடு அதன் மற்றொரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ.1,299-ன் செல்லுபடியையும் 336 நாட்களாக குறைத்துள்ளது.
பாதிக்கப்படுவது ஜியோ பயனர்கள் மட்டுமல்ல!
ஆக இனிமேல் ஜியோவின் நெட்வொர்க்கின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 12 மாத பேக்கைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பயனரும் கூடுதலாக 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். நிச்சயமாக இது ஒரு நல்ல நடவடிக்கை அல்ல. ஏனெனில் இதனால் பாதிக்கப்படுவது ஜியோ பயனர்கள் மட்டுமல்ல, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் பயனர்களும் தான். ஏனெனில் குறிப்பிட்டப்பட்டுள்ள மூன்று நிறுவனங்களும் 365 நாட்கள் செல்லுபடியாகும் ஆண்டு திட்டங்களை வழங்குகின்றன மற்றும் அவைகள் கூடிய விரைவில் ரிலையன்ஸ் ஜியோவின் "அடிச்சுவடுகளைப்" பின்பற்றக்கூடும்.
ஜியோ ரூ 1,299 ப்ரீபெய்ட் திட்டத்தின் புதிய மற்றும் தற்போதைய வேலிடிட்டி:
கடந்த டிசம்பர் 2019 இல் நிகழ்ந்த கட்டண திருத்தத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இரண்டு நீண்ட கால அல்லது வருடாந்திர திட்டங்களை வழங்கியது. அது ரூ.2,199 (2020 தொடக்கத்தில் இருந்து ரூ.2,020 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது) மற்றும் ரூ.1,299 ஆகும்.
இந்த இரண்டு திட்டங்களும் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 365 நாட்களுக்கு நன்மைகளை வழங்கின. கடந்த வாரம், ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.2,020 அல்லது ரூ.2,199 திட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக, புதிய ரூ.2,121 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது, அதன் செல்லுபடியாகும் காலம் 336 நாட்களாக குறைக்கப்பட்டது.
அதேபோல் ஜியோ அதன் ரூ.1,299 வருடாந்திர பேக்கை முழுவதுமாக நீக்காமல், அதன் செல்லுபடியை 336 நாட்களாக மாற்றியமைத்துள்ளது. அதாவது பழைய செல்லுபடியில் இருந்து 29 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ஜியோவின் நீண்டகால திட்டங்கள் இரண்டுமே (ரூ.2,121 மற்றும் ரூ.1,299) 336 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
ஜியோ ரூ 1,299 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:
நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ ரூ.1,299 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அவை அப்படியே இருக்கின்றன. அதாவது 24 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.
மறுகையில் உள்ள புதிய ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள், 12,000 ஜியோ அல்லாத எஃப்யூபி நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை அதே 336 நாட்களுக்கு வழங்குகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ரிலையன்ஸ் ஜியோ இனிமேல் இந்த இரண்டு திட்டங்களையும் வருடாந்திர திட்டங்களாக விற்பனை செய்யாது, அதற்கு பதிலாக, 12 மாதங்கள் செல்லுபடியாகும் நீண்ட கால சலுகைகளாக விற்கும்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவும் ஜியோவை பின்தொடரலாம்!
ரிலையன்ஸ் ஜியோவைப் போலவே, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களிடம் இரண்டு நீண்டகால திட்டங்கள் உள்ளன. ஏர்டெல் இரண்டு ஆண்டு திட்டங்களை ரூ 2,398 மற்றும் ரூ.1,498 என்கிற விலை நிர்ணயத்தத்தின் கீழ் கொண்டுள்ளது,
மறுகையில் உள்ள வோடபோன் ஐடியாவானது ரூ.2,399 மற்றும் ரூ.1,499 என்கிற இரண்டு ஆண்டு திட்டங்களை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. ‘வருடாந்திர’ என்ற பெயர் குறிப்பிடுவது போல, இந்த திட்டங்கள் அனைத்தும் 365 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளன.
இருப்பினும், பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டுமே கூடிய விரைவில் ரிலையன்ஸ் ஜியோவைப் பின்தொடரக்கூடும், அதாவது மேலே குறிப்பிட்ட ஆண்டு திட்டங்களின் செல்லுபடியை 336 நாட்களாக குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக