>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 டிசம்பர், 2019

    ஒரு மனிதன் எப்பொழுது புத்திசாலி ஆகிறான்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    மருமகள் : அத்தை, நான் இன்னைக்கு ஸ்வீட் செய்யறேன்...!
    அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்மா?
    மருமகள் : நிச்சயமா அத்தை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். புளி ரசத்துக்கு புளி போடணும்... தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும்? அத்தை....!
    அத்தை : 😳😳
    -------------------------------------------------------------------------------------------------------------
    பாபு : எதுக்கு ஆட்டோ சக்கரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?
    சீனு : போர்டுல என்ன போட்டிருக்காங்க-ன்னு பாருங்க.
    பாபு : Two Wheeler Parking Only!.
    சீனு : இப்படி இருக்கும்போது எப்படி ஆட்டோவ இங்க நிறுத்துறது? அதுக்குதான் ஒரு சக்கரத்தை கழட்டிக்கிட்டு இருக்கேன்.
    பாபு : 😩😩
    -------------------------------------------------------------------------------------------------------------

    ஒரு நாள் ராம் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டிருந்தார்.
    மனைவி : கண்ணாடி முன்னாடி கண்ண மூடிக்கிட்டு என்ன செய்யறீங்க?
    ராம் : நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்.
    மனைவி : 😠😠
    -------------------------------------------------------------------------------------------------------------

    பொன்மொழிகள்..!!
    👉 அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
    அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்.
    கடமையை பற்றி கனவு காணுங்கள்,
    அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

    👉 வாய்ப்புக்காக காத்திருக்காதே,
    உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.

    👉 ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
    உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான்.
    ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று
    பெருமை கொள்ளும் கணத்தில், முட்டாளாகின்றான்.
    -------------------------------------------------------------------------------------------------------------

    விடுகதைகள்..!!
    1. அமைதியான பையன்தான். ஆனாலும் அடிக்காமலேயே அழுவான்... அவன் யார்?

    2. அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது... அது என்ன?

    3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்... மற்றவன் நடப்பான்... அவன் யார்?

    4. உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி... அது என்ன?

    5. வலை தயாரித்து விரித்து வைப்பான், ஆனால் மீன் மட்டும் பிடிக்க மாட்டான்... அவன் யார்?

    விடைகள் :

    1. ஜஸ்கட்டி

    2. இடியாப்பம்

    3. கடிகாரமுள்

    4. கண்

    5. சிலந்தி
    குறளும்... பொருளும்...!!
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.

    பொருள் :

    ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக