திங்கள், 25 மே, 2020

பணம் இருக்கும்போது... பணம் இல்லாதபோது - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க மட்டுமே...!

ராமு : பல் டாக்டரை பாக்க போனேன், அங்க லேடி டாக்டர் இருந்தாங்க... திரும்பி வந்துட்டேன்.
சோமு : ஏன்?
ராமு : நாம் எந்த பொண்ணுக்கிட்டையும் பல்லை காட்டி நிற்க கூடாதுன்னுதான்.
சோமு : 😟😟
-------------------------------------------------------------------
மனைவி : என்னங்க... இன்னைக்கு நம்ம கல்யாணம் நாள்.. கோழி அடிச்சு குழம்பு வைக்கட்டுமா?
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கற..?
மனைவி : 😡😡
-------------------------------------------------------------------
விமலா : என்னடி இப்பெல்லாம் மேனேஜர் உன்னை பாத்து சிரிக்கறதில்லை?
கமலா : நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னேன் அதான்...!
விமலா : 😜😜
-------------------------------------------------------------------
பணம்..!!

💵 பணம் இல்லாதபோது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்டுல வந்து சாப்பிடுறான்...

💵 பணம் இருக்கும்போது வீட்டுல சமைச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுறான்...

💵 பணம் இல்லாதபோது வயிற்றை நிரப்ப சைக்கிள்ல போறான்...

💵 பணம் இருக்கும்போது வயிற்றை குறைக்க சைக்கிள்ல போறான்...

💵 பணம் இல்லாதபோது சோற்றுக்காக அலைகிறான்...

💵 பணம் இருக்கும்போது சொத்துக்காக அலைகிறான்...

💵 பணம் இல்லாதபோது பணக்காரனாக நடந்து கொள்கிறான்...

💵 பணம் இருக்கும்போது ஏழையாக காட்டிக் கொள்கிறான்...

'நிம்மதியாக இருக்கும்போது பணத்தை தேடுகிறான்...

பணம் இருக்கும்போது நிம்மதியை தேடுகிறான்"...
-------------------------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டான்..

சார் 'நடுரே"- னா என்னது?

சார் அப்புறம் சொல்லுறேன் என சமாளித்து டிக்சனரியில்.. தேடி தேடி ஓய்ந்து போனார்..

அவனைக் கண்டால் காணாதது போல் இருந்தார்...

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்...

சொல்லுங்க சார்?

வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்..

அவன் Nature என்று சொல்ல கடுப்பாகி போன சார் ஏன்டா நேச்சர்-னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ... உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு என கத்தினார்...

உடனே சார் காலில் விழுந்து அழுதான்...

சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என் புடுரே (Future)வீணாயிடும்...😆😆😀😀
-------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?

மிளகாப்பொடி,

மிளகால இருந்து வருது...

மஞ்சள்பொடி,

மஞ்சள்-ல இருந்து வருது...

அப்ப பல்பொடி,

பல்லு-ல இருந்துதான வரணும்?...😹😹
-------------------------------------------------------------------
குறளும்.. பொருளும்..!!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்கம் :

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்