Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

1 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படும் தக்காளி; காரணம் என்ன தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேசிய தலைநகரில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் இந்த மாதத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. 

குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஆசியாவின் மிகப்பெரிய மொத்த சந்தையில் தக்காளி ஒரு கிலோ 1 ரூபாய்க்கும் குறைவாக விற்கத் தொடங்கியது.

சந்தையில் காய்கறி சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதன் காரணமாக தேவை குறைவாக உள்ளது என்று மண்டி வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் கூறுகின்றனர்.

டெல்லியின் ஓக்லா மண்டியின் தணிக்கையாளர் விஜய் அஹுஜா இதுகுறித்து தெரிவிக்கையில்., தக்காளி மட்டுமல்ல, மற்ற பச்சை காய்கறிகளும் கால் பங்கு முதல் அரை மடங்கு விலை குறைவாக விற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கியா போன்ற காய்கறிகளின் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், அஹுஜா தெரிவித்துள்ளார். இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை வெங்காயத்தின் சராசரி விலை ஒன்றரை ரூபாய் குறைந்துள்ளது.

டெல்லியில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அஹுஜா தெரிவித்துள்ளார்.

சந்தையில் தேவை குறைந்து வருவதால் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக ஆசாத்பூர் மண்டியில் தொழிலதிபரும், இந்திய வணிக சங்கத்தின் தலைவருமான ராஜேந்திர சர்மா தெரிவித்துள்ளார். உணவகங்கள், தபாக்கள் மூடப்பட்டுள்ளன, இதனால் நுகர்வு குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைக்கப்பட்ட தேவை தவிர, டோக்கன் அமைப்பு காரணமாக, வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது மக்கள் சந்தைக்கு வருவதை தடுக்கிறது என்றும் ஷர்மா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக