Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

முகம் பார்க்கும் கண்ணாடி.. இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!

----------------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------------------------------
கணவன் : ஏம்மா ஒரு கப் காபி.
மனைவி : என்ன கேட்டீங்க?
கணவன் : காபி போடவான்னு கேட்டேன்.
மனைவி : 😬😬
----------------------------------------------------------------------------
யார் காரணம்?... குட்டிக்கதை...!!
----------------------------------------------------------------------------
ஒரு துறவி இருந்தார், அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார். அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார். அவருடைய சீடர்களுக்கு, இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே, பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார்? என்று குழப்பம் எழுந்தது.

துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் குருவை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள். சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை.

இவ்வாறு இருக்க, ஒருநாள் அந்நாட்டு மன்னர் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தார். அவர் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கியபோது அவர் வழக்கம் போல் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது மன்னருக்கு அதிர்ச்சி! சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர். ஆனால், இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன? என்று அவரிடம் கேட்டார் மன்னர். துறவி சிரித்தார்.

இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது, அவர்கள் கேட்கவில்லை... நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான காரணத்தை மன்னனிடம் சொன்னார். மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார்?... இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைக்கனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார்?... எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், பிரச்சனைக்கு யார் காரணம்?... மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண பொருத்தமான நபர் யார்? என்று தேடுவதற்காக கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன்.

எனவே, என் பிரச்சனையை யாராவது தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல், நானேதான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன். எப்போதும் இந்த கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும், தீமைக்கும் யார் காரணம்? என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. என் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும்? என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி.

அன்பிற்கினிய உறவுகளே... நம் வளர்ச்சிக்கும், நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும். வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல... மிகவும் எளிமையானது. அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில்தான் உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக