சனி, 8 பிப்ரவரி, 2020

சிட்டுக்குருவி... தூக்கணாங்குருவி... சொல்லும் கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

நோயாளி : டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். ஆனா தொப்பை குறையவே மாட்டேங்குது?
டாக்டர் : நாசமா போச்சு... தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்க காதுல தப்பா விழுந்துருச்சே...
நோயாளி : 🙄🙄
------------------------------------------------------------------------------------------------------------
ராமு : நேத்து ஏன்டா 'டல்"லா இருந்த?
சோமு : நேத்து என் பொண்டாட்டி 20000-க்கு புடவை எடுத்துட்டா... அதான்.
ராமு : அப்புறம் இன்னைக்கு மட்டும் சந்தோஷமா இருக்க?
சோமு : அந்த புடவைய உன் பொண்டாட்டிக்கிட்ட காட்டா போயிருக்கா...
ராமு : 😐😐
------------------------------------------------------------------------------------------------------------
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...!!
ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு தூக்கணாங்குருவிகள் மரத்தின் மீது ஒரு கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே சென்றிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்திற்குள் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, 'குருவி அக்கா எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே... தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

'போடி போ... உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டு போகமாட்டேன்" என்று குருவி மறுத்துவிட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து 'அப்படிப்போடு... அப்படிப்போடு" என்று ஜாலியாக பாடி கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, பிறகு தலை, கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து அடைத்து பூசிவிட்டு பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி... என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்