நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி
எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து
வருகிறார்.
இவர்
கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு எம்எஸ் படிக்க சென்றபோது ஸ்வீடன் நாட்டைச்
சேர்ந்த மரினா சூசேன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் நண்பர்களாக பழகி
வந்த இவர்கள் இடையே காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம்
செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம்
தெரிவித்தனர்.
இந்நிலையில்,
முதலில் மணமகள் வீட்டார் விருப்பப்படி கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் மணமகன் வீட்டார் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அதன்பின்
மணமகனின் விருப்பப்படி சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நம்
கலாச்சாரப்படி மணமகன் பட்டு வேட்டி சட்டை அணிந்தும், மணமகள் நீல நிற பட்டுப்புடவை
அணிந்தும், திருமணத்தில் காட்சி அளித்தனர்.
பின்னமணமக்களை
உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர். குறிப்பாக திருமணத்தில் மணமகள்
வீட்டார்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என குறிப்பிடப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக