----------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------------------------
தீபக் : சினிமா பாக்க போனா C Row-ல உட்காரக்கூடாது...
தீபன் : ஏன்?
தீபக் : Front-ல டி-B Row (பீரோ) இருக்கும்... அதான்...
தீபன் : 😛😛
----------------------------------------------------------------------
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் STD போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...
கணவன் : 😬😬
----------------------------------------------------------------------
மனைவி : வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க!
கணவன் : நீ என்ன சொன்ன?
மனைவி : ஆபிஸ் வேலையும் பாத்துக்கிட்டு வீட்டு வேலையும் பாத்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.
கணவன் : 😜😜
----------------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
----------------------------------------------------------------------
தோல்விகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்..
அது தான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
யாராவது தங்கள் வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று கூறினால்.. அவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த புதிய முயற்சியும் செய்ததில்லை என்று அர்த்தம்.
உங்கள் வாழ்க்கைக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். ஏனெனில் வேறு ஒருவரின் கால்களை கொண்டு உங்களால் நடக்க முடியாது.
வாய்ப்புகள் உன்னைத் தேடி வரும் என்று காத்திருக்காதே... உனக்கான வாய்ப்பை நீயே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
----------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------------------------------
1. ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் வெட்டிப்போடுவதில் கெட்டிக்காரர்கள். அது என்ன?
2. இறக்கை இருக்கும், பறவையல்ல. வால் இருக்கும், விலங்கு அல்ல. சக்கரம் இருக்கும், கனமல்ல. மிதக்கும் ஓடமல்ல. அது என்ன?
3. கையடக்கப்பிள்ளை பாடும், பேசும், அளவளாவும். அது என்ன?
4. ரத்தம் குடிக்கும். பாடும் பறவை. அது என்ன?
விடைகள் :
1. கத்தரிக்கோல்
2. விமானம்
3. செல்போன்
4. கொசு.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக