Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூன், 2020

COVAXIN என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா; மனிதர்கள் மீதான சோதனைக்கு ஒப்புதல்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் (Covid-19 Outbreak) இந்தியா மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

பாரத் பயோடெக் (Bharat Biotech) கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியின் பெயர் கோவாக்சின் (COVAXIN) மற்றும் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி-NIV) உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வைரஸின் திரிபு புனேவின் என்.ஐ.வி.யில் தனிமைப்படுத்தப்பட்டு பாரத் பயோடெக்கிற்கு அனுப்பப்பட்டது, அங்கு இந்த உள்நாட்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

தற்போது, ​​கொரோனா வைரஸின் 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக