இந்த திட்டத்தின் கீழ், தெரு விற்பனையாளர்களுக்கு (Street Vendor) சிறிய அளவு கடன் வழங்கப்படும். இது மீதான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.
கடன் பெற ஜூலை 2 முதல் பிரதமர் எஸ்.வி.நிதி போர்ட்டலில் (PM SVANidhi) விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்காக இணையதளத்தில் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தின் கீழ், சுய உதவிக்குழுவின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். மொபைல் பயன்பாடு மூலம் KYC செயல்முறையை மேற்கொள்ள முடியும்.
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், தெரு விற்பனையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இது வணிகத்தைத் தொடங்க அவர்களுக்கு உதவும். இந்த கடன் மிகவும் எளிதான விதிமுறைகளுடன் வழங்கப்படும். இதற்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை.
கொரானா காரணமாக நாட்டில் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் தொடங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள், தெரு விற்பனையாளர்கள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலவை நிலையங்கள், பான் கடைகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 50 லட்சம் தெரு விற்பனையாளர்களுக்கு பயனளிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக