செவ்வாய், 24 டிசம்பர், 2019

ஒரு மனிதன் எப்போது அழகாக தெரிகிறான்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

சிரிக்க சிரிக்க சிரிப்பு....
பாபு : பத்தாவது மாடியில் இருந்து குக்கர் ஒன்னு தவறி கீழே விழுந்துருச்சு... ஆனால் அந்த குக்கருக்கு ஒன்னுமே ஆகல... ஏன் தெரியுமா?
சீனு : தெரியலையே...
பாபு : ஏனா... அது டீரவவநசகடல குக்கர்... அதான் பறந்து போயிருச்சு...
சீனு : 😠😠
----------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதன் எப்போது அழகாக தெரிகிறான்?
மன்னிப்புக்கோரி மன்றாடும் போதும்,
மற்றொருவரை மன்னிக்கும் போதும் மட்டும்தான்
மனிதன் பேரெழிலுடன் இருக்கிறான்.
வேறெந்த நேரத்திலும் மனிதன்
இவ்வளவு அழகாக இருப்பதில்லை...
----------------------------------------------------------------------------------------------------

ஒரு குட்டி கதை...!!
ஒரு அடர்ந்த காட்டின் அருகில் மலை இருந்தது. அடர்த்தியான மரங்கள், அழகான செடிகள் நிறைந்து பசுமையாக காட்சியளித்தது. அக்காட்டில் காக்கை ஒன்று இருந்தது. அது எப்போதும் தன்னை பெருமையாகவே எண்ணிக்கொள்ளும். ஒருநாள் அந்த காக்கை பரந்து விரிந்த சமவெளியில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்தது.

அம்மரத்தின் அருகே செம்மறி ஆடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கூரிய நகங்கள், பெரிய இறக்கைகளுடன் பறந்து வந்த கழுகு ஒன்று, ஒரு செம்மறி ஆட்டின் குட்டியை தன் நகங்களால் பற்றிக்கொண்டு வேகமாக பறந்து சென்றது.

அதை பார்த்துக் கொண்டிருந்த காக்கை ஏன் அது மட்டும்தான் பலசாலியா? அதற்கு மட்டும்தான் பெரிய இறக்கைகளும், கூரிய நகங்களும் இருக்கிறதா? எனக்கும் இறக்கைகளும், கூரிய நகங்களும் இருக்கின்றன.

நான் கழுகு தூக்கிய செம்மறி ஆட்டைவிட பெரிய செம்மறி ஆட்டையே துக்குவேன் என்று மனதிற்குள் கர்வமாக எண்ணியது. உடனே தன்னுடைய எண்ணத்தை செயலாக்கும் படி வேகமாக செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு மேலே பறந்தது.

கூட்டத்தில் இருந்த பெரிய செம்மறி ஆட்டின் மேல் அமர்ந்தது. தன்னுடைய கால்களால் செம்மறி ஆட்டின் தோலை பற்றி தூக்க முயற்சித்தது. ஆனால் அதனால் தூக்க முடியவில்லை. மாறாக செம்மறி ஆட்டின் அடர்த்தியான ரோமங்களுக்குள் காக்கையின் கால்கள் மாட்டிக்கொண்டன.

காக்கை தன்னை விடுவித்துக்கொள்ள எவ்வளவோ முயன்று பார்த்தது. ஆனால் அதனால் முடியவில்லை. கால்களை எடுக்கும் முயற்சியில் தன் இறக்கைகளை வேகமாக அடித்தது.

காக்கை எழுப்பிய சத்தத்தைக் கேட்ட ஆடு மேய்ப்பவன் வேகமாக வந்து காக்கையை பிடித்து கொண்டு சென்றான். அப்போதுதான் தன்னுடைய பலவீனத்தை எண்ணி காக்கை வருந்தியது.

காக்கை கழுகு ஆகுமா? என்று தனக்குள் கேட்டுக்கொண்டது. தன்னுடைய தகுதிக்கு மீறி நடந்துக்கொண்டால் அழிவு நிச்சயம்.
----------------------------------------------------------------------------------------------------

நாயிடம் கற்க வேண்டியவை...!!
🐕 கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்...
🐕 உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்...
🐕 முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்...
🐕 நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்திருத்தல்...
🐕 நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல்...
🐕 உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்