>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 25 ஏப்ரல், 2020

    இவர்களை நம்பாதீர்கள்... இவர்களை ஏமாற்றாதீர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    ஆசிரியர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?
    மாணவன் : முட்டையிலிருந்து சார்...
    ஆசிரியர் : 😡😡
    ---------------------------------------------------------------------
    ராணி : என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபாத்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யுறது?
    வாணி : ஒன்னும் செய்ய வேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சுக்கோ. அழுகை தானா வரும்.
    ராணி : 😳😳
    ---------------------------------------------------------------------
    வாழ்க்கை தத்துவம் !!

    👉 பொய் சொல்பவரை நம்பாதீர்கள். ஆனால், உங்களிடம் நம்பிக்கை வைத்திருப்பவரை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள்.
    ---------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!

    ⭐ இப்படி ஆயிடுமோ? அப்படி ஆயிடுமோ? என்று தவிர்ப்பதை விட என்ன ஆயிடும் என்று துணிவதே மேல்.

    ⭐ இன்றைய காலக்கட்டத்தில் பேனாவின் முனையை விட, கட்ட விரலின் முனை மிகவும் வேகமானது

    யாரும் வெறுக்காத அளவிற்கு நம் வாழ்க்கை இருந்தால், யாரும் மறக்காத அளவிற்கு நம் மரணம் இருக்கும்.
    ---------------------------------------------------------------------
    மூளையிருக்கா...?

    👉 ஒரு ஊரில் ஒரு இறைச்சிக்கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொரு நாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், 'முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன.

    👉 ஒருநாள், அம்முதலாளியின் நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார். அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பரும் கூறினார்.

    👉 கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், 'முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான். திமிர்பிடித்தவனின் முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி...!!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக