சிரிக்கலாம் வாங்க...!
மாமியார் : அம்மியில அரைக்கும்போது வர வாசனை ஏன் மிக்ஸியில அரைக்கும்போது வர மாட்டிங்குது?
மருமகள் : அதுவா... மிக்ஸி மூடியை தொறந்து வெச்சு அரைச்சு பாருங்க... நல்லா குபீர்னு வாசனை வரும்...
மாமியார் : 😏😏
-----------------------------------------------------------------------
மகன் : அப்பா... எனக்கு கணக்கு பாடம் சொல்லித்தாங்க...
அப்பா : எனக்கு கணக்கு தெரியாது... எங்க அப்பா என்னை படிக்க வைக்கல...
மகன் : உங்களுக்கு மட்டும் எவ்வளவு நல்ல அப்பா கிடைச்சுருக்காங்க...!
அப்பா : 😳😳
-----------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
குறளும்... பொருளும்...!!
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
விளக்கம் :
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களை சொல்வதே அறம் ஆகும்.
-----------------------------------------------------------------------
இதில் யார் ஏழை...?
இதில் யார் ஏழை...?
ஒரு பணக்கார பெண்மணி துணி கடைக்கு சென்று கடை பையனிடம், தம்பி என் மகனுக்கு கல்யாணம்... வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்க கம்மியான விலையில் ஒரு சீலை கொடுப்பா...
சிறிது நேரத்தில் அதே கடைக்கு சென்ற வேலைக்காரி கடைக்கார பையனிடம் தம்பி என் பையனுக்கு கல்யாணம்... எஜமானி அம்மாவுக்கு கொடுக்க நல்ல, விலை அதிகமா இருக்க புடவையை கொடுப்பா...
-----------------------------------------------------------------------
என்ன ஒரு வில்லத்தனம்...?
மதியம் சாப்பாட்டில், சாப்பாட்டை விட வெண்டைக்காய் பொரியல் அதிகமாக இருப்பதை பார்த்துவிட்டு கணவர் கேட்டார்...
கணவன் : என்னம்மா இது? இவ்வளவு பொரியல் வெச்சிருக்க...?
மனைவி : வெண்டைக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்லுவாங்க... கேள்வி பட்டிருக்கீங்க தான...
கணவன் : ஓஓஓஓஓஓஓ.... புரிஞ்சுருச்சு... என்னை பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்திற்கு காட்டப்போற... அப்படித்தான?
மனைவி : சே... சே... வெண்டைக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்திற்கு நிரூபிக்கப்போறேன்...
கணவன் : 😌😌
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக