வியாழன், 28 மே, 2020

3-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் முழு சுப கிரகமாக விளங்குபவர் குருபகவான். மனித வாழ்விற்கு உண்டான அனைத்து ஏற்றங்கள், நன்மைகள் மற்றும் செல்வங்களை வாரி வழங்கக்கூடியவர் என்பதால் குருபகவானுக்கு தனிச்சிறப்பு உண்டு.

ஜோதிடத்தின்படி குருவின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகும். குரு ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரங்கள். குரு இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குருபகவான் ஆவார். அசுர குரு 'சுக்கிரன்" ஆவார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.

லக்னத்திற்கு 3-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு எடுக்கும் முயற்சி அனைத்திலும் அனுகூலம் உண்டாகும்.

3ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 பிடிவாத குணம் உடையவர்கள்.

👉 எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

👉 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

👉 எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

👉 எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

👉 தேவைகளுக்கு செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

👉 கபட நாடகத்தில் வல்லவர்கள்.

👉 எதிர்பாராத உதவிகள் அவ்வப்போது கிடைக்கும்.

👉 பெரியோர்களிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடக்கூடியவர்கள்.

👉 சமூக பணிகளில் சுயநலத்தோடு செயல்படக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்