Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

"மரியாதைக்குரிய விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்!

விகடன் பத்திரிகை குழுமத்தில் பணி செய்து வந்த பத்திரிகையாளர்கள் பலர் நீக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
 
விகடன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர்கள் பலர்க் கட்டாயப்படுத்தி வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் உண்மை என இப்போது தெரியவந்துள்ளது.
விகடன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் 176 பேரிடம் அதன் நிர்வாகம், தாங்களாக பணியிலிருந்து வெளியேறுவதைப் போல் கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாரம்பரியமான தமிழ் பத்திரிகையின் இந்த நடவடிக்கை நல்லதல்ல, எனச் சென்னையில் செயல்படும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சங்கம் கூட்டாக அந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்குச் சென்னை பத்திரிகையாளர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரம்பரிய பத்திரிகை நிறுவனமான விகடனிலிருந்து 176 பேர் கட்டாயப்படுத்திப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா பேரழிவு காலத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது கண்டிப்பான முறையில் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுமட்டுமன்றி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தொழிற்சங்க விதிகளுக்கு எதிரானது என்பதை மறந்து விடாதீர்கள்.

விகடன் குரலாக ஒலித்தவர்களை, குரலற்றவர்களாக ஒடுக்கி உள்ளது பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் தாங்களாக பணியிலிருந்து வெளியேறுவதுபோல் கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு பணியைப் பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.

இத்தனை நாட்கள் விகடன் கட்டிக்காத்து வந்த பெருமைகளைப், இந்த பணிப்பறிப்பு நடவடிக்கைகள் படுகுழியில் தள்ளிவிடும். மேலும், இதனால் எதிர்வரும் நாட்களில் நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

முன் நாட்களில் விகடனுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து போராடினோம் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து 6 மாதக் காலம் அவகாசம் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்பீர்கள் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக