சிறந்த ஜோக்ஸ்...!!
மணி : இந்த டாக்டர், இதுக்கு முன்னாடி ஹோட்டல் நடத்தினாருன்னு எப்படி சொல்ற?
கலா : அதுவா... இருமல், சளி, காய்ச்சலுக்கு மருந்து ரெடின்னு வெளியே விளம்பரப்பலகை வெச்சிருக்காரே!
மணி : 😟😟
-------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா நான் ஊடயளள-க்குள்ள வரும்போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள் : நீங்க தானே டீச்சர் நேத்து சொன்னீங்க 'துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு" அதான்...!!
ஆசிரியர் : 😩😩
-------------------------------------------------------------------------------------------------
கணவன் : என்னடி... இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்திருக்க?
மனைவி : கட்டிக்க போறது நான்தானே!
கணவன் : துவைக்கிறவனுக்கு தானே அந்த கஷ்டம் தெரியும்..!
மனைவி : 😝😝
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கைக்கான திறவுகோல்....!!
ஒரு ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது.
ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள் பாலைவனத்தில் தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும்போது, நமது நிழல் விழும் இடத்தில் குழியை தோண்டினால் புதையல் கிடைக்கும் என கூறினர். அதனால் அவன் தன் நிழல் விழும் இடத்தில் குழியை தோண்ட ஆரம்பித்தான். அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்துவிட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் நீ உன்னிடம், 'இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு விட்டு, இல்லாத ஒன்றிக்கு ஆசைப்பட்டால் துயரம்தான்" ஏற்படும் என்றார்.
ஆம்.. பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் கூட மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக