சீரியல் கில்லர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்வி
பட்டிருப்பீர்கள் இந்தியாவில் தான் உலகிலேயே அதிக நபர்களை கொலை செய்த கொலைகாரன்
தக் பேக்ராம் பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.
சீரியல்
கில்லர்
சீரியல் கில்லர் இந்த பெயரைக் கேட்டால் உங்களுக்கு யார் நினைவு வரும் தமிழகத்தில் ஆட்டோ சங்கர். சர்வதேச அளவில் ஜாக் தி ரிப்பர், இப்படி பலரை உங்களுக்கு நினைவு வரலாம். சீரியல் கில்லர் பற்றி சற்று ஆர்வம் உள்ளவர்களுக்குக் கூட "பிகினி கில்லர்", சார்லஸ் மேன்சன் உள்ளிட்ட சிலரைச் சொல்லுவார்கள். அப்படி யாருக்கும் பெரியதாக அறிமுகமில்லாத இந்த உலகையே உலுக்கிய கிட்டத்தட்ட 931 பேரைக் கொலை செய்த கொலை காரன் தக் பேக்ரான் பற்றி முழு செய்தி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இன்று தக்ஸ் ஆஃப் வாழ்க்கை என நாம் சில நகைச்சுவை வீடியோக்களில் கண்ணாடி, சிகரெட் வைத்து வீடியோ எல்லாம் பார்த்திருப்போம் அதில் உள்ள தக் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவரின் பெயரிலிருந்து தான் துவங்குகிறது. அதன் பின்னால் உள்ள வரலாறு என்ன? யார் இந்த தக் பேக்ரான். இவர் எப்படி 900 பேரைக் கொலை செய்தார்? ஏன் கொலை செய்தார்? வாருங்கள் முழுமையாகப் பார்க்கலாம்.
தக் பேக்ராம்
1
800ம் ஆண்டுகளில் வட இந்தியாவில் பல பழங்குடி மக்கள் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மிகக் குறுகிய அளவிலா மக்கள் தொகையைக் கொண்ட கூட்டமாக இவர்கள் வாழ்ந்து பல்வேறு குழுக்களாக இருந்தனர். இவர்கள் பற்றிய வரலாற்றை நாம் தீரன் திரைப்படத்தில் பார்த்திருப்போம் அப்படியான ஒரு கூட்டத்தின் தலைவன் தான் தக் பேக்ராம்.
800ம் ஆண்டுகளில் வட இந்தியாவில் பல பழங்குடி மக்கள் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மிகக் குறுகிய அளவிலா மக்கள் தொகையைக் கொண்ட கூட்டமாக இவர்கள் வாழ்ந்து பல்வேறு குழுக்களாக இருந்தனர். இவர்கள் பற்றிய வரலாற்றை நாம் தீரன் திரைப்படத்தில் பார்த்திருப்போம் அப்படியான ஒரு கூட்டத்தின் தலைவன் தான் தக் பேக்ராம்.
ஓத் சாம்ராஜ்யம்
ஆங்கிலத்தில் தற்போது பிரபலமாக உள்ள 'Thug' என்ற வார்த்தை இந்தியில் உள்ள 'Thag' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு அர்த்தம் ஒரே மாதிரியான திட்டமிடப்பட்ட கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களைச் செய்யும் கூட்டத்தின் பொதுப் பெயராகும். இவ்வாறான பல கூட்டங்கள் வட இந்தியாவிலிருந்தன. இப்படியாக வட இந்தியாவில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியைப் பிடிக்கும் காலத்திலிருந்த பகுதி தான் ஓத், தற்போது உள்ள அயோத்தியா பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்ட சாம்ராஜ்யம் தான் ஓத் என அழைக்கப்பட்டது.
தக்கீஸ்
இந்த சாம்ராஜ்யத்தின் ராஜாவாக இருந்தவர் தான் தக் பேக்ராம் இவர் பெயருக்குப் பின்னால் வந்த தக் என்ற பெயர் அவர் தக்கீஸ் எனப்படும் கொலை கொள்ளை செய்யும் கும்பல்களின் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக அவர் விளங்கியதால் அந்த பெயர் அவருக்கு வந்தது.
ஜேம்ஸ் போட்டான்
இவரைப் பற்றி பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனியை சேர்ந்த ஜேம்ஸ் போட்டான் என்பவர் அதிகமாக எழுதியுள்ளார். இவர் மூலமே இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தததற்கா அத்தனை விஷயங்களும் வெளியில் வந்தது.
காளி பக்தர்கள்
இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் காளியின் பக்தர்கள். இவர்கள் தங்கள் கடவுள்களுக்காகப் பலி கொடுக்கவே மனிதர்களைக் கொலை செய்து வந்தார்கள். அப்படியாகப் பலி கொடுப்பது அவர்களின் மதக்கடமையாக நினைத்தார்கள். அப்படியாகப் பலி கொடுத்தால் தான் காளி திருப்பதியடைவாள் எனக் கருதி அவர்கள் அந்த கொலையைச் செய்து வந்தனர்.
கடவுளுக்குப் பலி
இவர்கள் என்றுமே காசுக்காவோ அல்லது மற்ற எந்த விஷயங்களுக்காகவும் உயிரைக் கொல்ல மாட்டார்கள் தங்கள் மதத்தின் பெயரால் மட்டுமே கடவுளுக்குப் பலி கொடுப்பார்கள் அதுவும் அவர்கள் கூட்டத்தைத் தவிர மற்றவர்கள் குறிப்பாக அந்த பகுதிக்குப் புதிதாக வருபவர்களைப் பிடித்துப் பலி கொடுப்பார்கள்.
Thug Behram, The man who created a gang of decoits or #ThugsOfHindostan , The Indian serial killer with over 900 vi… https://t.co/iDF6ZJBu3U
— Indian Art (@IndiaArtHistory) 1538133653000
தனி யுக்தி
இதனால் உயிருக்குப் பயந்து டில்லியிலிருந்து வெளி ஊர்களுக்குச் சென்று வணிகம் செய்யும் எந்த வியாபாரியும், அவர்கள் இருக்கும் பகுதி வழியாக மற்ற ஊர்களுக்குச் செல்லமாட்டார்கள். சுற்றித் தான் செல்வார்கள். இவர்கள் கொலை செய்வதற்கு எனத் தனியாக ஒரு யுக்தி இருந்தது.
கொலைகள்
அதற்கு முன்னர் இவர்கள் இப்படியான கொலைகள் செய்கிறார்கள் என்று வெளியுலகிற்குத் தெரியவந்த கதையே மிகப் பயங்கரமான கதை. 1800களில் இவர்கள் இருக்கும் பகுதி வழியாகச் சென்ற வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், காவலர்கள், ஏன் அந்த காலத்தில் வண்டி கட்டி செல்வார்களே இப்படியாகச் சென்ற வண்டிகள் கூட காணாமல் போனது. இவர்கள் எல்லாம் எங்குச் சென்றார்கள் அவர்களுக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை. பல காவலர்கள் இது குறித்து விசாரிக்க அந்த ஊருக்குள் சென்றவர்களும் ஊரு திரும்பவில்லை.
வில்லியம் ஸ்லீமேன்
அப்பொழுது இந்த வழக்கு குறித்து விசாரிக்கப் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கேப்டன் வில்லியம் ஸ்லீமேன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் தான் முதன் முதலில் இந்த ஊர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்தாலும் இங்கு ஒரு ரகசிய ராஜாங்கமே நடந்து வருகிறது. அதற்கு தக் பேக்ராம் தான் ராஜா என்றும் அவரின் கீழ் உள்ள 200 பேர் சேர்ந்து தான் இதைச் செய்கிறார்கள் எனக் கண்டு பிடித்தார்.
#Inde #Tueur : Thug Behram est connu pour avoir tué 125 personnes entre 1790 et 1840 par strangulation mais beaucou… https://t.co/LfavC2f8KF
— Extrême Orient (@AsieHistoire) 1511639243000
Thug Behram, The man who created a gang of decoits or #ThugsOfHindostan , The Indian serial killer with over 900 vi… https://t.co/iDF6ZJBu3U
— Indian Art (@IndiaArtHistory) 1538133653000
75வது வயதில் சிக்கினார்
பின்னர் தக் பேக்ரானை கைது செய்ய அவர் அவர்கள் ஊரிலிருந்து வெளியே வரும் சமயம் பார்த்து டில்லி - ஜபல்பூர் பகுதியில் 10 பொறிகளை வைக்கிறார். அதில் எதிலும் அவர் அவர் சிக்கவில்லை அவனைக் கைது செய்யப் பல திட்டங்கள் போடப்பட்டும் அத்தினையிலிருந்து தக் பேக்ராம் தப்பி விடுவான். இந்நிலையில் 1840ம் ஆண்டு தக் பேக்ரானின் 75வது வயதில் பிரிட்டிஷ் போலீசார் அவனைப் பிடிக்க வைத்த ஒரு பொறியில் தக் பேக்ராம் சிக்கிவிடுகிறார். அதன் பின் கைது செய்யப்பட்டார். அவர்கள் செய்த கொலை சம்பவங்கள் குறித்து பின்னர் விசாரணை நடந்தது.
குள்ள நரி
கிட்டத்தட்ட தக் பேக்ராம் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பின்பே அவர்கள் எப்படி கொலைகள் செய்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியவந்தது. அவர்கள் ஊருக்குள் வரும் வணிகர்களை கண்காணிப்பதிற்காக ஒரு குள்ள நரியை வளர்த்துள்ளனர். அந்த நரி ஊருக்குள் புதிய மனிதர்கள் வந்தால் ஊருக்கு வெளியிலிருந்து ஒரு வித்தியாசமா சத்தம் எழுப்பும் இந்த சத்தம் தான் அவர்களுக்கு சிக்னல்
மஞ்சள் நிற துணி
ஊருக்குள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த சிக்னல் கிடைத்துவிட்டால் அவர்கள் உடனடியாக தங்கள் கடவுளுக்குப் பலி கொடுக்க தயாராகிவிடுவார்கள். அவர்கள் பயன்படுத்துவது வெறும் மஞ்சள் நிற துணி தான் இந்த துணையில் ஒரு குறிப்பிட்ட முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். ஊருக்குள் புதிய ஆட்கள் வரும்போது மக்கள் அந்த நரி வித்தியாசமாகச் சத்தமிடுமாம். இந்த சக்னல் கிடைத்ததும் தக் பேக்ராம் மஞ்சள் நிறத்துணியுடன் மனித வேட்டைக்குத் தயாராகிவிடுவார்.
வியாபாரி
வெளியிலிருந்து வரும் நபர் ஊருக்குள் நுழைந்ததும் அவரை மற்றவர்கள் பின் தொடர்வார்கள் எல்லாம் சாதாரணமாக இருப்பது தான் அந்த வியாபாரிக்குத் தெரியும். ஆனால் அவரை சுற்றியுள்ள அனைவரும் அவரை கொலை செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. அந்த நபர் குறிப்பிட்ட பகுதிக்கு வரும் போது அவரை சுற்றி வளைத்து அனைவரும் பிடித்து விடுவார்கள் சுற்றி வளைக்கும் போது அவருக்குத் தப்பிக்க எந்த வழியும் இல்லாத ஒரு இடத்தில் தான் அப்படிச் செய்வார்கள்.
அதிர்ச்சி
படிபடும் நபரை மற்றவர்கள் சேர்ந்து கை மற்றும் கால்களைக் கட்டிக் குப்புறப் படுக்க வைத்துவிடுவார்கள். அப்பொழுது தக் பேக்ராம் அங்கு வந்து அந்த நபரின் மேல் ஏறி அமர்ந்து அவர்களது கழுத்தில் அந்த உருவம் பொறித்த மஞ்சள் துணியைக் கட்டி நெறித்துக் கொன்று விடுவார்கள். பின்னர் அவர்களது உடலை ஒரு கிணற்றில் வீசிவிடுவார்கள். இதுதான் அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இதை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்காம் அதிர்ந்து போய் விட்டது.
931 பேர் கொலை
இவர்கள் இதுவரை எத்தனை போரைக் கொலை செய்திருப்பார்கள் என ஒரு ஆய்வு செய்தது அந்த ஆய்வு அத்தனை பேரையும் அதிர வைத்துவிட்டது. கிட்டத்தட்ட 931 பேரை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. இது உலகையே அதிர வைத்துவிட்டது ஒரே ஆள் 931 பேரைக் கொலை செய்தது பலரது ரத்தத்தை உறைய வைத்துவிட்டது.
கொலைகள் பாவம்
ஆனால் தக் பேக்ராம் 125 கொலைகளைத் தான் தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த பகுதியில் அவரைத் தவிர வேறு யாருக்கும் கொலை செய்யும் உரிமை கிடையாது. அவர் அவரிடம் இருக்கும் மஞ்சள் நிற துணியைப் பயன்படுத்தி கொலை செய்தால் மட்டுமே அது கடவுளுக்குப் பலியாகக் கருதப்படும். மற்ற வகையில் எப்படி கொலை நடந்தாலும் அது பாவமாகக் கருதப்படும் என்றே அந்த ஊர் மக்கள் கருதினர்.
கற்பனை செய்ய முடிகிறதா?
எனவே அவர்தான் அத்தனை கொலைகளையும் செய்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அப்படி அவர் அத்தனை கொலைகளையும் செய்திருந்தால் உலகில் அதிக கொலைகளைச் செய்த தொடர் கில்லர் என்ற பெயர் தக் பேக்ரானிற்குதான் கிடைக்கும். இப்படி ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்ந்துள்ளார் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?
உங்கள் கருத்து என்ன?
உலகின் மிக அதிக நபர்களைக் கொன்ற கொடூரமான கொலைகாரன் தக் பேக்ராம் மட்டுமல்ல அவர்களது மூதாதையர்கள் பலர் இவரை விட அதிக கொலைகள் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தக் பேக்ராம் என்பவர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக