Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 ஜூன், 2020

உலகிற்கு முக்கியம் சூரியனா? சந்திரனா?.. சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்!!

-----------------------------------------------------------------------
         சிரிக்கலாம் வாங்க...!
-----------------------------------------------------------------------
கமலா : என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியால மறுபடியும் பண்றாரு டாக்டர்...
டாக்டர் : இந்த சின்ன விஷயத்துக்கு போய் ஏன் இப்படி வருத்தப்படுறீங்க?
கமலா : நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பாத்துக்கிட்டு இருக்காரு...!
டாக்டர் : 😨😨
-----------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகிற்கு முக்கியம் சூரியனா? சந்திரனா?
மாணவன் : சந்திரன் தான் சார்!
ஆசிரியர் : எப்படி?
மாணவன் : சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரியில வெளிச்சம் இல்லாதபோது ஒளி கொடுக்குதுல்ல..
ஆசிரியர் : 😐😐
-----------------------------------------------------------------------
பேரன் : பாட்டி ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப்போறேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.
பாட்டி : பாத்துடா ராசா, மெதுவா ஓடு. வேகமா ஓடி கைய, கால ஒடச்சுக்காத..
பேரன் : 😝😝
-----------------------------------------------------------------------
தீபக் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.
குமார் : டாக்டரோட செலவை போய் நீங்க ஏன் பண்றீங்க?
தீபக் : 😬😬
-----------------------------------------------------------------------
                    விடுகதைகள்!!
-----------------------------------------------------------------------
1. உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?

2. குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான். அது என்ன?

3. மழைக்கால பாட்டுக்காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான். கடைசியில் பாம்புக்கு இறையாவான். அவன் யார்?

4. நல்லவர் கொள்ளும் தானம், நாலு பேருக்கு தர முடியாத தானம். அது என்ன?

விடை :

1. வியர்வை
2. தபால்
3. தவளை
4. நிதானம்.
-----------------------------------------------------------------------
            குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------------------
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

பொருள் :

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவருக்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக