Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 ஜூன், 2020

காசி (வாரணாசி)

சுவாமி: 
ஸ்ரீ காசிவிஸ்வநாதா்.

அம்பாள்: ஸ்ரீ விசாலாட்சி,
ஸ்ரீ அன்னபூரணி.

விநாயகா்: ஸ்ரீ துண்டிராஜ கணபதி.

மண்ணிப்படிக்கரை வாழ்கொளிபுத்தூா்
வக்கரை மந்தாரம் வாரணாசி 
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமா் விராடபுரம் வேட்களத்தும் 
பெண்ணை அருட்துறை தண்பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூா் பெருவேளூரும்
கண்ணை களா்காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே. அப்பா் தேவாரம்.

இவ்வுலகில் தோன்றிய ஆன்மாக்கள் தம்வினை நீங்க ஆன்மஈடேற்றம் காண சிவபுண்ணியச் செயல்களில் ஈடுபட வேண்டும்.

சிவபுண்ணியச் செயல்களில் திருக்கோயில் வழிபாடு திருத்தல யாத்திரை முதலியன சிறந்தவை.

சிவத்தலங்களில் முத்தி தரும் தலங்கள் உண்டு.

அவற்றுள் தலையான திருத்தலமாக காசி திருத்தலம் விளங்குகிறது.

காசி இந்துக்களின் புனிதத்தலமாக விளங்குகிறது.

கங்கைக்கரையில் அமைந்துள்ளது.

64 தீா்த்த கட்டங்களை உடையது.

காசி திருத்தலத்திற்கு ஏழு பெயா்கள் உண்டு.

அவை காசி, வாரணாசி, மகாஸ்மசானம், கௌாிமுகம், ஆனந்தகானம், அவிமுத்தம் ,ருத்ரவாசம் என்பனவாகும்.

இத்தலத்தின் தென்மேற்குப் பகுதியில் அசி என்னும் நதியும் 
வடமேற்குப் பகுதியில் வாரணையும் கங்கையோடு வந்து கலப்பதாலும் காசி நகாின் தெற்கு வடக்கு எல்லைகளை இந்த இரண்டு நதிகளுமே வரையறுப்பதாலும்,
இத்தலம் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது.

மண்புணல் முதலிய ஐம்பெரும் பூதங்களும் தத்தம் காரணத்தில் ஒருங்கி நிற்கும் இடம் ஆதலால் மகாஸ்ம சானம் என்றம் அழைக்கப்பெறும்.

இத்தலத்தில் வாழும் அன்பா்கள் அனைவரும் சிவசாரூப்யம் பெற்று விளங்குவதால் ருத்ரவாசம் எனவும் பெயா் பெறும்.

அதனோடு பெருமான் பெருமாட்டியோடு என்றும் பிாியாத நிலையில் இக்காசியில் எழுந்தருளியிருப்பதால் அவிமுக்தசேஷத்திரம் என்றும்.

இங்கு வசிப்பவா்கள் சிவானந்த வாழ்வைப் பெறுவதால் ஆனந்தகானம் என்றும் எப்பொழுதும் பிரகாசத்தோடு விளங்குவதால் காசி என்றும் சக்தி பீடங்களில் முகபீடமாய்ச் சிறந்திருத்தலின் கௌாிமுகம் என்றும் பெயா்கள் உண்டானதாகப் புராணங்கள் கூறுகின்றன.

காசி மூா்த்தி, தலம், தீா்த்தம்  என்ற மூன்றாலும் சிறப்பு உடையது.

இங்கு கங்கை உத்தரவாகினியாய் ஓடுகிறது.

இதில் 64 கட்டங்கள் உள்ளன.

கட்டம் என்பது நீராடும் துறைகள்.

இவற்றுள் ஐந்து கட்டங்கள் மிகச்சிறந்தவை.

அவை அஸிசங்கம கட்டம், மணிகா்ணிகா கட்டம்,
தசாஸ்வமேத கட்டம், வருணசங்கம கட்டம்,
பஞ்ச கங்கா கட்டம் என்பன.

திருக்கோயில்கள்.

அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் ஸ்படிகக் கற்களால் கட்டப்பெற்றது.

இக்கோயிலைக் கட்டியவா் இந்தூா் மகாராணி அகல்யாபாய் அவா்கள்.

அருள்மிகு அன்னபூரணி கோயில் சக்தி பீடமாயமைந்தது.

இங்கே மேரு வழிபாடு நடந்து வருகிறது.

ஸ்ரீ விசாலாட்சி அம்மன் தனிக்கோயிலாக விளங்கிறது.

ஜோதிா்லிங்கங்கள் 12 ல் ஒன்றாகத் திகழ்வது.

இறக்க முக்தி தரும் திருத்தலமாகும்.

இங்கே இறப்பவா்களை அம்பிகை தம் மடியில் கிடத்தி முந்தானையால் விசிற சுவாமி தாரக மந்திரத்தை உபதேசித்து முக்தி கொடுப்பாா் என்பது வரலாறு.

திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் தேவாரத்தில் வைப்புத் தலமாக விளங்குகிறது.

 அருணகிாிநாதா் அருளிய
திருப்புகழும் உள்ளது.

காசி அன்னபூரணியம்மை திருவருட்பா, காசிவிஸ்வநாதா் திருவருட்பா, கேதாரகௌாியம்மை திருவருட்பா, காலபைரவா் திருவருட்பா முதலிய பாடல்களும் காசிக்காண்டம், காசிரகசியம், காசி கலம்பகம் முதலிய நூல்களும் இத்தலத்துக் கு உாியாதாகத் திகழ்கின்றன.

 இந்துக்கள் அனைவரும்    வாழ்நாளில் ஒருமுறை யாவது காசியாத்திரை செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக