Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கலக்கலான ஜோக்ஸ்...!!

பாபு : டெய்லி ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு என் பையன் அடம் பிடிக்கிறான், அப்படியே போனாலும் மதியமே வீட்டுக்கு வந்துடுறான்!
ராம் : அடப்பாவமே! என்ன படிக்கிறான் உங்க பையன்?
பாபு : படிச்சாக்கூட பரவாயில்லையே, ஸ்கூல் ர்நயன ஆயளவநச-ல இருக்கான்.
ராம் : 😂😂
-----------------------------------------------------------------------------------------------
மனைவி : ஏங்க இப்படி குடிச்சுட்டு தலைகீழா நடந்து வர்றீங்க?...
கணவன் : நேரா நடந்தா எல்லாம் தலைகீழா தெரியுது... அதான்.
மனைவி : 😡😡
-----------------------------------------------------------------------------------------------
அம்மா : ஆராரோ! ஆரிராரோ! ஆசை மகளே கண்ணுறங்கு!
குழந்தை : அம்மா நான் தூங்கணும் கத்தாதே!
அம்மா : 😳😳
-----------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. அந்திவரும் நேரம், அவளும் வருவாள். அது என்ன?

2. பூமியிலே பிறக்கும், புகையாய் போகும். அது என்ன?

3. இரவும், பகலும் ஓய்வு இல்லை. படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன?

4. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?
-----------------------------------------------------------------------------------------------
விடைகள் :

1. நிலா.

2. பெட்ரோல்.

3. இதயம்.

4. புல்லாங்குழல்.
-----------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
✨ உணவு என்பது மருந்து...

✨ ஆடை என்பது மானம்...

✨ பணம் என்பது தேவை...

✨ ஆங்கிலம் என்பது மொழி...

✨ தமிழ் என்பது உயிர்...

✨ அம்மா என்பது பாசம்...

✨ அப்பா என்பது ஆசான்...

✨ ஆனந்தம் என்பது ஆயுள்...

✨ சினம் என்பது நோய்...

✨ துன்பம் என்பது பரீட்சை...

✨ தோல்வி என்பது பாடம்...

✨ வெற்றி என்பது தற்காலிகம்...

✨ நட்பு என்பது இளமை...

✨ குடும்பம் என்பது பற்று...

✨ கர்மா என்பது தொடரும்...

✨ எண்ணம் என்பது வாழ்க்கை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக