>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 ஜனவரி, 2020

    யார் யாரிடம் விலகியிருக்க வேண்டும்?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...!!
    பாபு : நான் பிறந்தது சென்னையில்... ஆனால் படிச்சது மும்பையில்.
    ராமு : அப்போ ஸ்கூலுக்கு போக ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?
    பாபு : 😁😁
    ---------------------------------------------------------------------------------------------
    பையன் : hi...
    பொண்ணு : hi da….
    பையன் : எங்க இருக்க?
    பொண்ணு : நான் எங்க அப்பாவோட கார்ல கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போயிட்டு... பர்ச்சேஸ் பண்ணிட்டு... கார வீட்ல விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பண்ணிக்கிட்டு இருக்கேன்... ஓகேவா?
    பையன் : ஓகேங்க...
    பொண்ணு : ஆமா, நீ எங்க இருக்க?
    பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னால இருக்குற சீட்லதான் உக்காந்து இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க வேண்டாம்னு சொல்லத்தான் ஆநளளயபந பண்ணேன்....
    பொண்ணு : 😜😜
    ---------------------------------------------------------------------------------------------
    கணவன் : நெஞ்சு வலிக்குது... டாக்டருக்கு phone பண்றியா?
    மனைவி : உங்க மொபைல் password சொல்லுங்க...
    கணவன் : இப்போ பரவால்ல... டாக்டருக்கு phone பண்ண வேண்டாம்.
    மனைவி : 😡😡
    ---------------------------------------------------------------------------------------------
    யார் யாரிடம் விலகியிருக்க வேண்டும்?
    உங்களை ஏமாற்றுபவர்...
    மதிக்காதவர்...
    உபயோகிப்பவர்...
    விமர்சிப்பவர்...
    தாழ்த்தி பேசுபவர்...
    நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் விலகியிருங்கள்....
    ---------------------------------------------------------------------------------------------
    தேடல்...!!

    எல்லாம் தெரியும் என நினைப்பவரை விட,
    தெரியாது என நினைப்பவரே அதிகம் தெரிந்து கொள்கிறார்.
    தெரியும் என்பவரின் தேடல் முடிவடைகிறது.
    தெரியாது என்பவரின் தேடல் முன்னேறிச் செல்கிறது.
    நாமும் சாதனை புரியலாம்... எப்போது?
    பிறரால் இயலாத ஒன்றை...
    புதிதான ஒன்றை...
    புதுமையான கோணத்தில் சிந்தித்த ஒன்றை...
    படைக்கும் படைப்பாற்றல் நம்மிடத்தில் இருந்தால்,
    நாமும் சாதனைகள் புரியலாம்.
    ---------------------------------------------------------------------------------------------

    விடுகதைகள்...!!
    1. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான். அது என்ன?

    2. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும். அது என்ன?

    3. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை தன்னுள் சேமித்து வைக்கும். அது என்ன?

    விடைகள் :

    1. சோளம்
    2. முத்திரை
    3. பஞ்சு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக