Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…!


 

ந்தோனேஷியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.

முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் மீது பாய்ந்தது ஊசி மீன் என்னும் வகையைச் சேர்ந்த மீனாகும்.அந்த மீனின் வாய் ஊசிபோல் கூர்மையாக இருப்பதுடன், அது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடியதுமாகும்.அப்படி அந்த மீன் பாய்ந்தபோது, அதன் வாய் முகமதின் கழுத்தில் குத்தி, கழுத்தைத் துளைத்துக்கொண்டு மறுபக்கம் வெளியே வந்துள்ளது.
 
உடனே அவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர்.

கழுத்தில் மிக முக்கியமான இரத்தக்குழாய் ஒன்று செல்வதால் அதை சேதப்படுத்திவிடாமல் அந்த மீணை அகற்றவேண்டியிருந்திருக்கிறது.மீன் அகற்றப்பட்டாலும், தொடர்ந்து முகமதுக்கு காய்ச்சல் இருப்பதால், அவன் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக