Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

சிந்தனைக்கு ஒரு குட்டிக்கதை... சவுக்கு மரத்தின் மாயஜாலம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! தெறிக்க வைக்கும் ஜோக்ஸ்...!!

மனைவி : என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?
கணவன் : ரெண்டாவது 'ஷாக்" எதுக்குன்னுதான்..!
மனைவி : 😠😠
-----------------------------------------------------------------------------------------------
சிந்தனைத் துளிகள்..!!
அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம். அந்த அறிவை பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ஒழுக்கம்.

எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும். உண்மையைத்தவிர.

விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்.

மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால், நமது தவறை உணர்வது கடினம்.
-----------------------------------------------------------------------------------------------

அட அப்படியா?
தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்..!

உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்..!

இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டப்படமாட்டான்..!

ஆன்ம சிந்தனையும், கடின உழைப்பும் உன் ஆயுதமானால் வெற்றி உன் வசமாகும்..!

எந்த நிலை வந்தாலும் வந்த நிலையை மறவாதே..!
-----------------------------------------------------------------------------------------------

கொஞ்சம் முயற்சி பண்ணுங்க..!!
1. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

2. நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை...
-----------------------------------------------------------------------------------------------

குட்டிக்கதை..!!
ராமு : நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு செல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ் : நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டிடம் கட்டும்போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டிடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டிடம் முடிந்து கிரகப்பிரவேசத்தன்று எந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரகப்பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய்விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கைதான் வாழும்.

அதை ஆடு, மாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பையில் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

சவுக்கு மரம் அடுத்த கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக