Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஜூன், 2020

ஒருவரின் மதிப்பு எதைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!

டாக்டர் : உங்க கணவருக்கு எங்கேயாவது ஓடிப்போகணும் போல தோணிக்கிட்டே இருக்காம்..
மனைவி : சரி பண்ண முடியுமான்னு பாருங்க.. இல்லைன்னா.. என்னையும் இழுத்துட்டு ஓடுறமாதிரி மருந்து கொடுங்க.
டாக்டர் : 😝😝
----------------------------------------------------------------------
தீபக் : சார், என்னோட பொண்ண காலையில இருந்து காணோம்...
போலீஸ் : அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்.. முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க...
தீபக் : எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்.. ‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர்கி‌ட்ட பேச‌ சொ‌ல்‌றீ‌ங்க?
போலீஸ் : அவரோட பைய‌ன‌ காணோ‌ம்னு இ‌ப்ப‌தா‌ன் புகா‌ர் கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன்.
தீபக் : 😳😳
----------------------------------------------------------------------
உண்மை தானே?
எல்லோரும் வாழ்க்கையில் நாம் முன்னேறவில்லை என்று
வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றோமே தவிர,
பின்வாங்காமல் செல்கின்றோம்
என்பதை நினைத்து சந்தோஷப்படவில்லை...
----------------------------------------------------------------------
பிரிப்பதும்... சேர்ப்பதும் - சிறந்த எடுத்துக்காட்டு..!!

தையல்காரர் ஒருவர் தனது கடையில் துணிகளை தைத்துக் கொண்டு இருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து அவர் வேலை செய்வதை பார்த்து கொண்டு இருந்தான்.

தனது தந்தை புதுத்துணியை எடுத்து அதை அழகான கத்தரிக்கோலால் சில துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்தரிக்கோலை காலருகே போட்டுவிட்டு ஊசியை கொண்டு துணியை தைத்தார். துணியை தைத்து முடித்ததும் அந்த ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார்.

இதை பார்த்து கொண்டு இருந்த அவர் மகன் அவரிடம் 'அப்பா! கத்தரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது, மலிவானது. ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்?" என்று கேட்டான்.

அதற்கு அவனது தந்தை, நீ சொல்வது உண்மைதான், கத்தரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.

அதாவது, 'ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக