Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 மார்ச், 2020

நம்முடைய விளக்கம் அர்த்தமற்றது... எப்பொழுது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!!

ஆசிரியர் : உண்மைக்கு எதிர்பதம் என்னன்னு கேட்டதுக்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியல மேடம்!
அம்மா : அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்!
ஆசிரியர் : 😳😳
-----------------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர் மூச்சுவிட்டால் நெஞ்சு வலிக்கிது.
டாக்டர் : கவலைப்படாதீங்க. ஒரே மாத்திரையில் ரெண்டையும் நிறுத்திடுறேன்.
நோயாளி : 😱😱
-----------------------------------------------------------------------------------------
நீதிபதி : ஒரே வாரத்தில் நீ பத்து இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறாய். அதைப்பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?
கைதி : ஆமாங்க. என்னைப்போல எல்லாரும் கடினமா உழைச்சாங்கன்னா, நம்ம நாடு கண்டிப்பா சீக்கிரம் முன்னேறிடுங்கய்யா.
நீதிபதி : 😠😠
-----------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா ராமு! பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கியே?
ராமு : நீங்கதானே சார் பாம்புக்கு கால் கிடையாதுன்னு சொன்னீங்க!
ஆசிரியர் : 😩😩
-----------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

விளக்கம் :

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.
-----------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
⭐ எவன் ஏழைகளுக்கு கடன் தருகிறானோ, அவனுக்கு கடவுளிடமிருந்து வட்டி கிடைக்கும்.
⭐ அதிர்ஷ்டத்தின் விளையாட்டுதான் ஒரு மனிதனின் வாழ்க்கை.
⭐ பழக்க-வழக்கங்களும், சம்பிரதாயங்களும் வேறுபடலாம். ஆனால், மனிதனின் இயற்கை குணம் ஒன்றுதான்.
⭐ ஒருவன் என்றைக்கு சிரிக்காமல் இருக்கிறானோ... அந்த நாள் தொலைந்து போன நாளே.
-----------------------------------------------------------------------------------------
விளக்கம் அர்த்தமற்றது... எப்போது?
நம்மை புரிந்து கொள்ளாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட,
அவர்களின் புரிதல் என்னவோ...
அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி.
தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கமும் அர்த்தமற்றதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக