
தொழில்நுட்பம் வளர வளர நாமும் அதற்கு இணையாக
பயணித்துக் கொண்டே தான் வருகிறோம். ஆனால் அதே அளவு அதில் இருந்து பாதுகாப்பு அம்சத்தை
கற்று உணர்ந்து அதை உபயோகிக்கிறோமா என்றால் அது கேள்விக் குறி தான்.
சமூகவலைதள பாதுகாப்பு
தற்போது பலரும் சமூகவலைதளங்களில்தான் தங்களது
பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 1 ஜிபி அளவிலாவது
பேஸ்புக் வாட்ஸ்ஆப் இன்ஸ்டா டுவிட்டர் போன்றவற்றில் காலி செய்வது வழக்கம்.
புதுமாப்பிள்ளையின் பேஸ்புக் பக்கத்திற்கு
பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும்
சிக்மகளூவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில
நாட்களிலேயே அந்த புதுமாப்பிள்ளையின் பேஸ்புக் பக்கத்திற்கு யார் என்றே தெரியாத இளைஞர்
ஒருவரிடம் இருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது
புதுமாப்பிள்ளைக்கு தலையில் இடி விழுந்தது
இருந்த வீடியோ
பேஸ்புக்கில் வந்த அந்த தகவல் புதுமாப்பிள்ளைக்கு
தலையில் இடி விழுந்தது போல் இருந்துள்ளது. மெசேஜ்ஜிவ் வந்த வீடியோவில் தனது மனைவி வேறொரு
ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அடுத்தடுத்து
புகைப்படமும் வந்துள்ளது.
வீடியோவிற்கு பிறகு குறுஞ்செய்தி
இதை பார்த்து அந்த புதுமாப்பிள்ளை அதிர்ந்து
போகியுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு பிறகு குறுஞ்செய்தி ஒன்றும் வந்துள்ளது. அதில்
தங்களது மனைவி திருமணமானதுக்கு பிறகும் தன்னை சந்தித்து தனிமையில் இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது
அதிர்ந்து போன புதுமாப்பிள்ளை
இந்த தகவலை பார்த்து அதிர்ந்து போன அந்த
புதுமாப்பிள்ளைக்கு என்ன செய்வது என்று தெரியாது திகைத்து போகியுள்ளார். அந்த சமயத்தில்
தன் மனைவியை விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனால் இந்த செய்தியை கேட்ட அவரது
மனைவி தன்னை விவாகரத்து செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் மிரட்டியுள்ளார்.
போலீசாரிடம் புகார்
இதைத்தொடர்ந்து அந்த புதுமாப்பிள்ளை இதுகுறித்து
போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில்
அவருக்கு அந்த வீடியோ, புகைப்படங்களை அனுப்பிய நபர் அவருடைய மனைவியின் முன்னாள் காதலன்
என்பது தெரியவந்தது.
முன்னாள் காதலன் கைது
புதுமாப்பிள்ளை அளித்த புகாரின் பேரில்
முன்னாள் காதலனைக் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். அதேபோல் இதுகுறித்து போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக